நியூசிலாந்து பயண நினைவுகள் – 7


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
இனம் புரியாத அவளுடைய மனக்கலக்கம் விலகத் தொடங்கியது. புதுமையாக இருந்த எல்லாம் அவளுக்குச் சாதாரணம் ஆகிவிட்டன. அவர்கள் எல்லாம், உண்மையில், ‘நட்சத்திர மனிதர்கள்’ அல்லர். அவர்கள் அனைவரும் இந்தியத் தமிழர்கள். அவர்கள் நெற்றியில் இருந்தது, நட்சத்திரம் அல்ல; அது, கோவிலில், சாமி கும்பிடச் சென்றபோது அர்ச்சகர் ஆசியுடன் பூசிவிட்ட சந்தனமும் குங்குமமும். அவளுக்குப் புதுமை எல்லாம் இப்பொழுது பழகிப் போய்விட்டதால், அவளும் பழகிப்போன புதியள் ஆகிவிட்டாள்.   

Advertisements

நியூசிலாந்து பயணநினைவுகள் — 6


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
விடியற்காலை நிலம் அதிர்ந்தது. ‘தவேரா’ மலையின் வயிற்றிலிருந்து நெருப்புக் கோளங்கள் சீறிப்பொங்கி வெடித்துச் சிதறின. சிலமணி நேரத்தில் கிராமம் முழுவதுமே புதையுண்டு காணமல் மறைந்து ஒழிந்தது. ‘தவேரா ஏரி’ சுவறித் திடர்ப்படு மேடாயிற்று. மலைச்சாரலிலிருந்த காடுகள் எரிந்து அழிந்துபோயின. நீலநிறத்தில் இருந்த ‘நீல ஏரி’ (Blue Lake’)   பயத்தால் வெளிறிப்போய்விட்டது போலச் சாம்பல் கலந்து வெண்ணிற ஏரி ஆகிவிட்டது.

நியூசிலாந்து பயணநினைவுகள் — 5


முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி
பழங்காலத்தில் மராயிக்கு அடிக்கல் நாட்டுவது நரபலியோடுகூடிய சடங்காக இருந்தது. கிராமத்தில் செல்வாக்குள்ள குடும்பத்து இளைஞன் ஒருவன் — அவன் மவுரித்தலைவனுடைய மகனாகக்கூட இருக்கலாம் — பலியிடப்படுவான். புரோகிதன் அவனுடைய இருதயத்தை எடுத்து நெருப்பில் சுட்டு, தின்பான். அதன்பின், முறைப்படி பலசடங்குகளைச் செய்வான். பலியிடப்பட்ட இளைஞனின் பெருமை, புகழ், செல்வாக்கு என்பன்வற்றிற்கேற்ப மராயின் புனிதமும் அமையும் என நம்பப்பட்டது.

நியூசிலாந்து பயணநினைவுகள் — 4


முனைவர் கோ.ந். முத்துக்குமாரசாமி
ரொற்றுவாவை நெருங்க நெருங்க கந்தக மணம் மூக்கைத் தொளைத்தது. ரொற்றுவாவுக்குக் ‘கந்தகநகர்’ (Sulphar City) என்றொரு பட்டப் பெயரும் உண்டு. 
மவுரியின் கிராமம் அல்லது குடியிருப்பு ‘பா’ (Pa) எனப்படும். ‘பா’ பெரும்பாலும் குன்றின் உச்சியில் இருக்கும். அங்கிருந்து அடிவாரத்தில் உள்ளோர் நடமாட்டத்தைக் காணும்படியாக இருக்கும். ‘பா’வைச் சுற்றிலும் வேலி போடப்பட்டு இருக்கும். அதைச்சுற்றி அகழி வெட்டப்பட்டிருக்கும். பகைவர் நடமாட்டத்தை அறிய உயர்ந்த பரணும் மறைவாக அமைக்கப்பட்டிருக்கும்.

நியூசிலாந்து பயண நினைவுகள் – 3


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
மவுரி சமூக அமைப்பில் திருமணத்திற்கு மட்டும் எந்தவொரு சடங்கும் இல்லை. ஒருவன் ஒருத்தியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து, அவளும் அவனுடைய விருப்பத்தை ஏற்று உடன்பட்டால் அவனும் அவளும் கணவன் மனைவியாகி விடுவர். ஆணின் வீட்டுக்குப் பெண் சென்று ஓரிரவு தங்குவதுதான் திருமணச் சடங்கு.

நியூசிலாந்து பயணநினைவுகள் — 2


முனைவர் கோ.ந். முத்துக்குமாரசாமி
இந்தியர்கள் பணி தேடியே இங்கு குடியேறுகின்றனர்.; வளமான வாழ்வினை நாடியே இவர்கள் இங்கு வருகின்றனர். இவர்கள் இங்கு தங்கள் தொழில் திறமையைப் பணமாக்கிக் கொள்கிறார்களே யன்றிப் பொருள் முதலீடுசெய்வதில்லை என்ற கருத்து நிலவுகின்றது. அதனால், அரசு குடியேற்றச் சட்டத்தில்கொண்டு வரும் மாற்றங்கள் இந்தியர்களையே பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகின்றது.
சீனர்களும் ஜப்பானியர்களும் இங்கு பெரிய அளவில் பொருள் முதலீடுசெய்கின்றனர். ஜப்பனியர்கள் உல்லாசப் பயணிகளாக அதிக அளவில் இங்கு வந்து செலவிடுகின்றனர். நியூசிலாந்தின் பொருளாதாரத்திற்கு இவ்விருநாடுகளின் உறவு மிக இன்றியமையாதது. எனவே, இவர்களை அரசு கட்டுப்படுத்த விரும்புவதில்லை.

நியூசிலாந்து பயணநினைவுகள் — 1


முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி —
தம் நாட்டில் நிலவிய துன்பமயமான உள்நாட்டுக் கலவரங்களிலிருந்து தப்பிக்க விரும்பிய அவர்கள், நகாயுவே கூறிய நெடுந்தொலைவிலுள்ள,- மக்கள் வாழாத அத்தீவுகளுக்குச் சென்று குடியேற முடிவு செய்தனர். அங்கு இயற்கையில் கிடைக்கும் உணவுகள், மதிப்புயர்ந்த பச்சைக் கற்கள், பிறசெல்வங்கள் முதலியன பற்றி நகாயுவேயிடமிருந்து அறிந்த செய்திகள் அவர்கள் எண்ணத்திற்கு ஊக்கமூட்டி விரையச் செய்தன.

கச்சியப்ப முனிவரின் காஞ்சிப்புராணம் — 6


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
“தேன்சிந்தும் நறுமணமலரை அணிந்த மயில்போன்றவளே! பிணிப்புத் தளர்ந்து அலர்ந்த மலர்களும், தளிரும், மணங்கமழ்ந்து, பூங்கொம்பினை நறுமணமலர்க்கொடி தென்றல்வீச வந்து தழுவி அசைவது தலைவரொடு மடமகளிர் நிகழ்த்திடும் கலவியைத் தோற்றுவதைப் பார்.
“வெற்றிகொள்ளும் வில்லும், பிறையும் ஏங்குமாறு விளங்கும் அழகிய நுதலை உடைய உமையே! தென்றலில் அசையும் தேன்கமழும் மலர்க்கொடியின் அருகில், பூங்கொம்புகள் வளைந்து ஆடுவது, ஊடிய மங்கையரைக் காமம் ததும்பிய மைந்தர்கள் குனிந்து, காலில் பணிந்து, ஊடல் தணிப்பதைப்போல இருப்பதைப் பார்!

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 16


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
என்றைக்கு அவன் வஞ்சமகளான பூதனையின் முலையில் வாய்வைத்து பால் உறிஞ்சுவது போல உயிரையே உறிஞ்சி எடுத்தானோ, அன்றே தாயான யசோதை அவனுக்கு முலைப்பால் கொடுக்கப் பயம்கொண்டுவிட்டாள். தன்னுயிரையும் உறிஞ்சிவிடுவானோ என்ற பயத்தினால் அல்ல! ‘இவன் இவ்வளவு அரிய பெரிய செயல்களைச் செய்தவனாயிற்றே; இவன் குழந்தையல்ல; தெய்வம். அவனுக்கு நான் எவ்வாறு பாலூட்டுவது?’ என்ற ஒரு தயக்கம்தான்!

கச்சியப்ப முனிவரின் காஞ்சிப் புராணம் – 5


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
வலிய கையில் தாங்கும் வில்லிலிருந்து தொடுக்கும் மலர்க்கணைகள் முற்றிலும் தீர்ந்து விட்டன. நீர்த்துறைகளில் வெண்மையான சங்குகள் மணி சொரியும் வயல்களில் சுரும்பும், பொய்கையில் பல்வகைப்பூக்களும் முழுவதும் எய்து முடிந்தமையால் அற்றுப் போய்விட்டன. எய்யக் கணையில்லமல் போய்விட்டமையால் மன்மதனும் தோற்றான்.
கருப்பினந் கரும்பு வில்லினனாகிய மன்மதன். போருக்குப் பின் தோற்ற அர்சர்கள் வென்றவனுக்குத் திறைசெலுத்துவர். அதுபோல, கோங்க மரங்கள் பூத்தன, அவ்வாறு பூத்திருந்தமை மன்மதன் அலங்கரிக்கப் பட்ட தேரினைத் திறையாக நிறுத்தியதை ஒத்திருந்தது.

கச்சியப்ப முனிவரின் காஞ்சிப்புராணம் — 4


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
களவொழுக்கத்தில் காதலரொடு புணர்ச்சி கொண்ட தலைவியின் விழிச் சிவப்பின் செழுமையைக் கண்டு, இச்சிவப்பு கலவியினாலாயிற்றோ அன்றி நீர்விளையாடலின் ஆயிற்றோ என ஐயுற்ற செவிலியர், கூந்தலில் சூடிய மலரிலிருந்து சொட்டும் தேன் துளியினைக் கண்டு, இச்சிவப்பு நீர் விளையாட்டின் ஆயது எனத் தெளிந்தார்.
இவ்வாறு வந்து தங்கிய இளவேனிலில் காமவேள்விழாநாளில் ஒருநாள், மானின் மருட்சியை வென்ற கண்ணளாகிய அம்மையுடன் மலர்த்தவிசில் விடைக்கொடி உயர்த்தவராகிய இறைவன் அகில உயிர்களும் களிப்புறும்பொருட்டுத் தாம் நிகழ்த்தும் ஒப்பற்ற இன்பவிளையாட்டினிடையில் அந்தப்புரத்தில் உள்ள பூஞ்சோலையைக் காக்கும் தெய்வக்கன்னி இடைநொசிய நடந்துவந்து, கயிலையில் அந்தப்புரத்தைச் சார்ந்து அங்குவந்து அடிவணங்கும் தேவமகளிர்களோடு செங்கை கூப்பினள்; பணிந்து எழுந்தாள்.

கச்சியப்ப முனிவரின் காஞ்சிப்புராணம் — 3


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
கூந்தலினில் ஒழுகிச் சிந்தும் நீர்த்துளியினை வளமான துகிலினால் ஒற்றி, தகரச் சாந்து தடவி, விரல்களால் சிக்கு நீவி, அகிற்புகையாட்டி, வண்டுகள் மொய்க்கும் மலர்மாலிகை சூட்டிக் களித்தனர் சிலர்.
மகளிரின் முகத்தை நோக்கி இரவு வந்ததென்று ஆம்பல்கள் மலர்ந்தன. கரையில் சேர்க்கப்பட்டவை வாடியதால் போர்க்களத்தில் சயத்திரதன் இத்தகைய நாளே என்பது போலப் புதுமலர் கொய்ய மறுபடியும் புனலுள் மூழ்கினார்.
வளைந்த கரும்புவில்லுடைய மன்மதனும் அழகிய இரதிதேவியும் தம்முள் மலரம்பு கொண்டு போர் செய்வது ஒப்ப, மங்கையரும் காதலுற்ற மைந்தரும் மணமுள்ள தாமரை மலர்களையும் குவளைமலர்களையும் பறித்து ஒருவர்மேல் ஒருவர் வீசிக் களித்தனர்.