கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 22


முனைவர் இரா. இராமகிருட்டினன்
சோழர் ஆர் என்ற அத்திப்பூவையும், பாண்டியர் வேப்பம்பூவையும் சேரர் போந்தை என்ற பனம்பூவையும் சின்னங்களாகப் பெற்றிருந்தனர். கோவூர்கிழார் சோழ மன்னனைப் பார்த்து நின்னைப் பகைத்தவன் சேரனும் அல்லன், பாண்டியனும் அல்லன், வேறு ஒரு சோழனே என்று எடுத்துரைக்க அவரவர் பூச்சின்னங்களைப் பயன்படுத்தினார்.

Advertisements

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 21


முனைவர் இரா. இராமகிருட்டினன்
இலவின் பூக்கள் விடியற்காலையில் காணப்படும் சில விண்மீன்கள் போலக் காணப்படுகின்றனவாம். இதன் இதழ்கள் பெரிதாக இருக்கும். கோங்கின் நுண்தாது இதன்மீது படும்போது, பவளச் செம்பில் பொன்துகள் சொரிந்ததைப் போன்று காட்சியளிக்கும் என்று அகநானூறு (17 மற்றும் 25 : 9-11) அழகுறப் பாடுகின்றது.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 20


முனைவர் இரா. இராமகிருட்டினன்
காஞ்சியை ஆற்றுப் பூவரசு என்றும் கூறுவர். தண்ணீர் நிறைந்த பொய்கை, ஆறு, மடு இவைகளின் கரைகளில் இது வளர்ந்து நிற்கும். தாதும், தேனும் நிறைந்திருப்பதால் வண்டுகள் எப்போதும்  இம்மலரைச்சுற்றி ஆர்த்துக்கொண்டே இருக்கும். அத்துடன்,இதன் தாதினைக் குயில்களும் அளைந்துகொண்டிருக்கும்.

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 19


முனைவர் இரா. இராமகிருட்டிணன்
முருகப் பெருமானுக்கு ஆறு தலைகள் என்பதால், ஆறு இதழ்கள் மட்டுமே உள்ள காந்தள் மலருக்குக் கார்த்திகை மலர் என்னும் பெயரும் உண்டு.
தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.
தாழம்பூவின் மருத்துவ குணங்களைச் சித்த மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 18


முனைவர் இரா. இராமகிருட்டிணன்
சேடல் மலரை அறிஞர்கள் இக்காலப் பவளமல்லி என்றும் பாரிசாத மலர் என்றும் குறிப்பிடுகின்றனர் 
கொகுடி என்னும் மலரை இக்காலத்தில்  ‘அடுக்கு மல்லி’ என்கின்றனர்.
ஞாழலால் தழையாடை புனைவர்; ஞாழல்மரத்தில் தழைநார்க் கயிற்றில் மகளிர் ஊஞ்சல் ஆடினர்; கடலாடு மகளிர் ஞாழலைக் கொய்துகொண்டு சென்று  விளையாடுவர். ஞாழலில் கடற் காக்கைகள் கூடு கட்டும்

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 17


முனைவர் இராம். இராமகிருட்டினன்
எண்ணெய் எடுப்பதும், தேங்காய் நார் எடுப்பதும், அதிலிருந்து கயிறு திரிப்பதும் குடிசைத் தொழில்களாகவும், பெரிய ஆலைத் தொழில்களாகவும் வளர்ந்துள்ளன. இந்தியாவின் மேற்குக் கரையிலும், அயனமண்டலத் தீவுகளிலும் உள்ள மக்களின் செல்வத்திற்கு வேறு எந்தத் தனிப்பயிரைக் காட்டிலும் தென்னையே காரணம் என்று சொல்வது மிகையாகாது.
தாமரை மலர்கள் மலர ஆரம்பிக்கும்போது அதன் வெப்பநிலை மாற்றம் அடையத் தொடங்குகிறது. இந்த வெதுவெதுப்பான வெப்பநிலையில் ஒவ்வொரு தாமரைப் பூவும் ஒரு ‘வாட்’ சக்தியை வெளிப்படுத்துகிறது. நாற்பது மலர்கள் கூடி ஓர் அறையில் உள்ள 40 வாட் குழல் விளக்கை எரிய வைக்க இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் — 16


முனைவர் இரா. இராமகிருட்டிணன்
வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப்பயன் கொண்டவை. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகள் கரைந்து இரத்தம்சுத்தமாகும். இதனால் இரத்தமானது அதிகமான பிராணவாயுவை உட்கிரகிப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகித்து, இரத்த அழுத்தம், இரத்தசோகைபோன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 15


முனைவர் இரா. இராமகிருட்டிணன்
ஆயர் குல இளைஞர் ஏறு தழுவுமுன் கார் காலத்தில் தோன்றும் பிடவு அரும்பு, செங்காந்தள் பூ, காயாம்பூ இவற்றோடு பிற பூக்களையும் கலந்து தலைமாலையாகச் சூடியதைக் கலித்தொகை காட்டுகிறது. மேலும், பிடவம் பூ கார் காலத்தில் மலரும்; கூர்நுனி கொண்ட களாவின் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும்போது பிடவு மலரும்; செடியில் நீண்ட முட்கள் இருக்கும்; செடி கருமையாகவும், பூவின் காம்பு நீளமாகவும், மொட்டுகள் கூர்மையாகவும் இருக்கும் எனவும், குளுமையும், நறுமணமும் கொண்டு வெள்ளை வெளேரென்று குலை குலையாய் பூத்துக் குலுங்கும் எனவும், பிடவப் பூக்குலைக்குள் பறவைகள் பதுங்கும் எனவும் சங்கப் பாடல்கள் கூறுகின்றன

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 14


முனைவர் இரா. இராமகிருட்டிணன்
காட்டில் உள்ள ஒரு புதர் யானைபோலத் தோற்றமளித்தது. அப்புதர் மேல் பூத்த முல்லைப்பூக்கள் யானை முகத்தில் உள்ள வரிகளும், புள்ளிகளும் போன்றிருந்ததை, “சிறுவீ முல்லை தேம்கமழ் பசுவீ, பொறிவரி நன்மான் புகர்முகம் கடுப்ப, தண்புதல் அணிபெற மலர” என்று நற்றிணை (248:1-3) குறிப்பிடுகின்றது. முல்லைக் கொடி அரும்பு ஈன்று பூத்த காட்சி காட்டுப்பூனை சிரித்தது போன்றிருந்தது என்று குறுந்தொகை (220:3-5) குறிப்பிடுகிறது. பூனைக்குட்டியின் பல்லைப்போன்று பசிய இலைகளுக்கு இடையே முல்லையின் அரும்பு மலரும் என்றும், வெண்மையான பூக்களைக்கொண்ட முல்லையை வேலியாகக் கொண்டது கோடைக்கானல் என்றும் புறம் (117:8-9, 205:6) பேசுகிறது.   

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 13


முனைவர் இரா. இராமகிருட்டிணன் கரந்தை கரந்தை கொடிவடிவில் காணப்படும். இதனை நாறு கரந்தை என்று குறிஞ்சிப்பாட்டு உரையும், கரந்தை மாக்கொடி என்று பதிற்றுப்பத்தும் (பதிற்றுப்பத்து, 40:5, குறிஞ்சிப்பாட்டு, 76 உரை) குறிப்பிடுகின்றன. கரந்தைப் பூவின் நிறம் சிவப்பு. இது மணம் உடையது.  செம்பூங்கரந்தை என்று அகப்பாடல் (269 : 11) கூறுகின்றது.  பெண் கன்றின் முலை எழுந்து காட்டாது, பரந்து  காட்டுவது போலக் கரந்தைப் பூவும் செடியினின்று எழுந்து நில்லாது அதனோடு படிந்து விரிந்துகாட்டும். இதனை, நாகு…

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 12


முனைவர் இரா. இராமகிருட்டிணன்
சண்பகப் பூக்கள் தென்கிழக்காசியாவில் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை முதன்மையாக வீடுகளில் அல்லது ஆலயங்களில் வழிபாடு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமிகளும், பெண்களும் இப்பூக்களை அழகுக்காகவும், இயற்கையான நறுமணத்திற்காகவும் தலையில் சூடிக்கொள்வர். அறைகளில் இயற்கையான நறுமணம் கமழ்வதற்காக நீர்ப் பாத்திரங்களில் இடப்பட்டு வைக்கப்படுகின்றன. மணவறைக் கட்டில்களிலும், மணமாலைகளிலும் இப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் — 11


முனைவர் இரா. இராமகிருட்டினன்
பாதிரிப்பூக்கள் வேனிற் காலத்தில் மலரும். செடிநூற்படி ஏப்ரல்-மே மாதங்களில் இது பூக்கின்றது. ‘வேனிற் பாதிரி’ என்றொரு வழக்கே ஏற்பட்டுவிட்டதன் காரணமாக “வேனிற்கட் பாதிரி” என்று நன்னூல், மயிலைநாதர் உரையும், ‘வேனிற் பாதிரி’ என்று குறுந்தொகையும் (167), அகநானூறும் (257) அழைக்கின்றன. பாதிரியின் மலர் சிறிது வளைந்து இதழ்வட்டம் குழாய் போன்று வளைந்து உள்ளதால் சங்கநூல்களில் ‘கூன்மலர்’ என அழைக்கப்படுகின்றது. “வேனிற் பாதிரி கூன்மல ரன்ன” என்று குறுந்தொகையும் (147), “வேனிற் பாதிரிக் கூனி மாமலர்” என்று அகப்பாடலும் (257) சுட்டுகின்றன