சந்நியாசமா, சம்சாரமா?


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
சந்நியாசிக்கு வேண்டியது வைராக்கியம். வைராக்கியம் எங்கே தவறுகிறதோ அப்பொழுது துறவறம் தவறிப்போகும். கணவன் மனைவி ஒற்றுமைஎன்று தவறுகிறதோ அன்றைக்கு இல்லறம் பாழாகும். வைராக்கியம் இல்லாத சந்நியாசம்  துராக்கரமாகும். ஒத்து வாழாத குடும்பம் காமவாழ்க்கையாகும்.  சிருஷ்டியில் என்ன முறையில் அவர்களைஅவர்கள் பக்குவப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தன்மை இருக்கிறதோ அதைப் பொறுத்துதான் வாழ்க்கை  கிடைக்கும். 

Advertisements

“வியாசர் விருந்து”


பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
http://wp.me/p4Uvka-11H
நம்முடைய தாய்மொழி தமிழிலேயே தகராறு ஏற்பட்டிருக்கும் காலம் இது. வடமொழி, தென்மொழி ஆகிய இரண்டும் நமது சொந்தமொழிகள்தான். தெய்வீகத் தமிழர் அப்பர் சுவாமிகள் சிவபெருமானுக்கு லட்சணம் சொல்கின்ற பொழுது, “வடமொழியும் – தென் தமிழும் ஆனவன் காண்,’’ என்று குறிப்பிடுகிறார். வடமொழி நமக்கு உரியதல்ல என்று சொல்லும் பாவத்தை உடனே கைகழுவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.