இலக்கிய இன்பம் – 3


மீனாட்சி பாலகணேஷ்
முக்கண்ணனுக்குள்ளது அரைக்கண்ணே!
தனது உடலில் சரிபாதியை உமைக்குக் கொடுத்தவன் அவன்; ஆகவே, அவனுக்குண்டான மூன்று கண்களில் பாதியான ஒன்றரைக்கண் உமையவளுடையதாகும். மற்றுமுள்ள அவனுடைய பங்கான ஒன்றரைக்கண்ணில் ஒருகண் வேடன் கண்ணப்பனால் கொடுக்கப்பட்டதாகும். ஆகவே அவனுடையதென மீதமுள்ளது அரைக்கண்தானே?”

Advertisements

இலக்கிய இன்பம் – 2


மீனாட்சி பாலகணேஷ்
‘உறங்குகின்ற கும்பகர்ணா! உங்களுடைய (அரக்கர் குலத்தின்) மாயப்பொய்யான வாழ்வெல்லாம் தாழ்வடைந்து கொண்டே செல்கின்றது. விழித்து எழுவாய்! காற்றாடி போல வில்லைக் கையிலேந்தி அலைந்து கொண்டிருக்கும் காலதூதர்களின் கைகளில் இனிக் கிடந்து உறங்குவாயாக!’
கும்பகருணனை எழுப்ப இராவணன் ஆணையிட்டபோது, எழுப்ப முயன்றவர்களும் சாபமிடுவது போல, காலதூதர் கையிலே இனிக்கிடந்து உறங்கப் போகிறாய் எனக் கூறியபடியே எழுப்பினர். 

சுப்பிரமணிய புஜங்கம்


மீனாட்சி பாலகணேஷ்
புஜங்கக் கவிதையுள் அமைந்துள்ள சொற்கோவைகள் ஒரு பாம்பானது வளைந்து வளைந்து ஊர்ந்துசெல்வதுபோல இருப்பதனால் இத்தகைய கவிதை அமைப்புக்கு புஜங்கம் என்று பெயர் அமைந்தது. சுப்பிரமணியக்கடவுளின் பெருமை, உயர்வு, முடிவற்ற தன்மை ஆகியவற்றை இரு விதங்களில் ஆதிசங்கரர் விளக்குகிறார்.

இலக்கிய இன்பம்-1


1. குதிரைக்காரன் மகன்
மீனாட்சி பாலகணேஷ்
வேளூர்க்காரனான சிவனுக்கே வாதம் வந்த காலாம்; அவருடைய மைத்துனருக்கு நீரிழிவாம்! அவருடைய பிள்ளையாகிய விநாயகனுக்கோ விகாரமான பெருவயிறாம்; இப்படியெல்லாம் தமக்கும் குடும்பத்தாருக்கும் வந்தநோய்களைத் தீர்க்கவே வகைஅறியாதவரான இந்தப்பெருமான், வேறு யாருடைய நோயை எவ்விதம் தீர்க்கப் போகிறார்?

தமிழன்னையின் அணிகலன்கள்


மீனாட்சி பாலகணேஷ்
சிறுமிகள் நாங்கள் பாடிமுடித்ததும் வாகீச கலாநிதி திரு. கி. வா. ஜ. அவர்கள், “குழந்தைகள் மிக அழகாகப் பாடினார்கள்,” என ஆசிகூறிப் பாராட்டிய பின்னரே விழாவினைத் துவக்குவார்கள். நாங்களும் பரவசத்தில் பூரித்து மகிழ்ந்த நாட்கள் அவை.
சிலப்பதிகாரத்தைப் படிப்பவர்கள் அடையும் மகிழ்ச்சி, பெருமிதம், ஆகியன இன்பமயமானவை. ஆகவே அத்தகைய பெருமை பொருந்திய சிலம்பினை அணிந்துள்ள தமிழ்த்தாயின் திருவடிகள் இன்பம் மிகுந்த அழகான மலர்களால் அர்ச்சிக்கப்படுவனவாம்.

வாழ்க்கை எனும் ஓடம்… – 2


மீனாட்சி பாலகணேஷ்
2. பிச்சை புகினும் கற்கை நன்றே!
வறுமைப்பட்ட குடும்பம். ‘வதவத’வென்று நான்கு தம்பி தங்கைகள். அவள் தகப்பனார் ஒரு சாப்பாட்டு விடுதியில் சமையல்காரர். அம்மா அங்கிங்கு வீடுகளில் சிரார்த்த சமையல், முறுக்கு சுற்றுவது, வடகம் போடுவது என்று அப்பப்போது வேலைசெய்வாள். பெரிய வரும்படி கிடையாது என்பது வெட்டவெளிச்சம். இரண்டுவேளை குடும்பம் ஒழுங்காகச் சாப்பிட்டாலே பெரிய விஷயம். இதில் பள்ளிக்கூடமா, படிப்பா, நோட்டா, புத்தகமா?

வாழ்க்கை எனும் ஓடம்…


மீனாட்சி பாலகணேஷ்
1. முகம் நக நட்பும் நட்பு!
ஆகா! ஜானாவின் மின்னஞ்சல் முகவரி கிடைத்துவிட்டது. என்னுள் ஒரே உற்சாகம் கொப்பளித்தது. உள்ளம் களியாட்டம் போட்டது!!
என் பள்ளிப்பருவ அருமைத்தோழிக்கு நீட்டி முழக்கி, வரிந்து வரிந்து ‘இதுவே தோழமையின் உதாரணம்,’ எனுமளவிற்கு ஒரு நீ……ண்ட மின்னஞ்சலை அனுப்பிவைத்தேன். நான் மாறவேயில்லை என அவள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

தமிழர் வளர்த்த நாடகக்கலைகள்


மீனாட்சி பாலகணேஷ்
தமிழில் பலவகையான நாடக நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 8-12 நூற்றாண்டு வரை சோழமன்னர்கள் ஆட்சியில் தமிழகத்தில் கலைகள் வளர்ச்சி பெற்றன. 11ம் நூற்றாண்டில் மூன்றாம் இராசேந்திரன் ஆட்சியில் தமிழ் நாடகக்கலை பெரும் வளர்ச்சி கண்டது. கோயில்களிலும், அரண்மனைகளிலும் மக்கள் கண்டுகளிக்கும் வண்ணம் இராசராசவிசயம் போன்ற நாடகங்கள் நடிக்கப்பெற்றன. அரையர் சேவை என்பது மிகத் தொன்மையான ஒரு வழிபாட்டுச் சேவை நாடகம்.

இராவணன் இயற்றிய சிவதாண்டவத் தோத்திரம்


மீனாட்சி பாலகணேஷ்
சிவபெருமான் ஆடவருக்கே உரிய, மிக விறுவிறுப்பான தாண்டவம் எனும் நடனவகையில் அவர் தலைசிறந்த விற்பன்னர். சிவபிரானுடைய இந்தத் தாண்டவ நடனத்தைப் பற்றிய ஒரு அருமையான தோத்திரம் சமஸ்கிருதத்தில் உள்ளது. நடனத்தின் ஜதிகளுக்கேற்றவாறு இந்தத் தோத்திரத்தின் சொற்பிரயோகங்கள் அமைந்து படிப்போரைப் பரவசப்படுத்துகின்றன.

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 21


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்

மீனாட்சி பாலகணேஷ்
தோள்வலி வீரமே பாடிப்பற!
கண்ணன் உபதேசித்த கீதையின் சாராம்சத்தைப் பிழிந்து தனது அற்புதக் கவிதைவரிகளில் அடக்கி கண்ணதாசன் அவர்கள் கொடுத்துள்ள பாடலை சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கேட்கும்போது அதன் ஆழத்தையும் சத்தியத்தையும் உணர்ந்து கண்களில் நீர் வடிகின்றது.
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
மரணத்தின் தன்மை சொல்வேன்…
மானிடர் ஆன்மா மரணமெய்தாது
மறுபடிப் பிறந்திருக்கும்……….

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 20


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
கானமழை பொழிகின்றான்…
மனித உயிர்கள் மட்டுமல்லாது மற்ற ஐந்தறிவு உயிர்களும் கிறங்கி நிற்கும் இசையின் இனிமையை நாம் இப்பாசுரத்தில் உணருகிறோம். இசைமயக்கம் மட்டுமின்றி, இசைப்பவன் தானே அவ்விசையாகி இயங்கும்போது ஏற்படும் மெய்ப்பாடுகளை – -‘செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப குறுவெயர்ப்புருவம்கூடலிப்ப’ எனவெல்லாம் நுட்பமாகப் பதிவு செய்திருக்கும் அழகும் இப்பாடலில் மிளிர்கின்றது.
‘இதுதானோ கிருஷ்ணானுபவம்’ என, என்னைப்போல் அதனை உணரவியலாத அறிவிலி தடுமாறுவதும் நியாயம்தானே?

தேவிக்குகந்த நவராத்திரி -11


மீனாட்சி பாலகணேஷ்
அன்னை அளித்த வேலாயுதம்!
போருக்குச் செல்லும்முன் முருகன் அன்னையிடம் வேல்வாங்கும் இந்த விழா – ஆண்டுதோறும் சிக்கலில் நடைபெறுவது. அன்னை (பார்வதி) வேல்நெடுங்கண்ணியிடமிருந்து வேலைப்பெற்றுக்கொண்டதும் முருகப்பெருமானுக்கு உடல் முழுவதும் வியர்க்குமாம். இன்றைக்கும் இது நடைபெறுகிறது. இது ஒரு மாபெரும் தெய்வ அதிசயம்.