சேவற்றிரு துவசம்


டாக்டர் ராஜாராம்
தலைக்கருகே சேவலும், அவன் பாதத்தின் அருகே மயிலும் உறைந்தன.  இதன் பொருள் என்ன? ஞானம் என்பது தலையில் ஒளிர்வது.  அதுவே சேவல்.   பக்தி என்பது அவன் சரணகமலத்தில் இருப்பது.  அதுவே மயில்.   வைரம் போன்ற வேல் வைராக்கியத்தை குறிப்பது.   அது நமது கல்மனத்துள் பாய்ந்து ஒரு குகையை உண்டாக்கியபின் குகன் அங்கு வந்து உறைவான். 

Advertisements

குறள் வழி காந்தீயம் 


டாக்டர் கே. ராஜாராம்
அருளுடை காந்தீயம் வாழ்நிலை அஃதிலார்க்கு
இருள் மனம் பூண்ட உடம்பு.
இனிய “சத்திய சோதனை” நீக்கிப் பிறிதொன்றோதல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

வெற்றிலை மாலை


வெற்றிலை மாலை  டாக்டர் ராஜாராம் http://wp.me/P4Uvka-iF    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே  ஒன்றைத் தாவி…   இந்த கம்பன் கவிதையை அறியாதார் யார்? பஞ்சபூதங்களும் இதில் மலர்கின்றன. கடைசிவரி — அவன் நம்மைஅளித்து காப்பான்.  அதாவது பக்குவப் படுத்திக் காப்பான். பிறவிப் பெருங் கடலிலிருந்து நம்மை அவன் காக்குமுன் அதற்குத் தகுதிபெற நாம் பக்குவப் படவேண்டியது அவசியம். அதையும் அவனே செய்வான்! இரண்டாவது வரியில் வரும் “ஆரியர்க்காக ஏகி “ —  “ஆர்யன்” என்றால் வடநாட்டான் என்று அர்த்தமல்ல! “ஆர்ய”…

பரமஹம்சரின் பரவசநிலை – 3


பரமஹம்சரின் பரவசநிலை – 3 டாக்டர் ராஜாராம் http://wp.me/P4Uvka-eM   1881ம் ஆண்டு.  ஒரு பணக்கார, முற்போக்கு சிந்தனை மிக்க( பகுத்தறிவு  உணர்வுடைய) இளைஞன் நரேந்திரன்.  சும்மா தமாஷாக பரமஹம்சரைக் காண வந்த அவனைக் கண்டதும் ஏதோ வெகு காலம் பழகியவர்  போல ஓடி வந்து கட்டி அணைத்து முத்தமிட்டு ” ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய் ” என்று உரிமையோடு கேட்டதும் திகைத்து விட்டான் நரேன்! ஒரு பைத்தியத்திடம் மாட்டிக் கொண்டோமோ என்று பயந்தான்! அவன் கையைப்…

பரமஹம்சரின் பரவசநிலை – 2


பரமஹம்சரின் பரவசநிலை – 2 டாக்டர் ராஜாராம் http://wp.me/P4Uvka-eC  1868ம் ஆண்டு. தக்ஷிணேஸ்வரத்திலிருந்து எல்லோருடன் ஸ்ரீ ராமகிருஷ்ண  பரமஹம்சர் காசிக்கு ரயில் பயணம் செய்தார். மாதுர் பிஸ்வாஸ் தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். தியோகார் ஸ்டேஷனில் ரயில் நின்றது. அங்கு வாழும் மக்களின் மிக வறுமையான சூழ்நிலை கண்டு வருந்தி மாதுரிடம் சொல்லி ஏழைகளுக்கு அன்னதானம் செய்வித்தார். காசி மணிகர்ணிகா மயானத்தில் சிவனாரும் காளியும் எரியும் உடல்களிலிருந்து  ஜீவனைக்  கரையேற்றும் கருணைச் செயலைக் கண்டு பரவசநிலை அடைந்தார். அச்சமயம்…

பரமஹம்சரின் பரவசநிலை – 1


பரமஹம்சரின் பரவசநிலை – 1 டாக்டர் ராஜாராம் http://wp.me/P4Uvka-ed  1865ம் ஆண்டு — இன்றைக்கு சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி கதாதரை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சராக உலகுக்கு அறிவித்தது! அதை சற்று பார்ப்போம்! 1836ல் கமார்புகூரில் அவதரித்த குழந்தைக்கு கதாதர் என விஷ்ணுவின் பெயரை வைத்து செல்லமாக கதாய் என்று அழைத்தனர் அவரது பெற்றோர். தக்ஷிணேஸ்வரத்தில் உள்ள ராதாகாந்த் கோவில் சந்நிதிக்கு கதாதரும் அடுத்துள்ள காளியன்னையின் சந்நிதிக்கு அவரது மருமான் ஹ்ருதய்  என்பவரும் அர்ச்சகர்களாக…

எல்லோரும் ஓரினம் -1


டாக்டர் ராஜாராம் http://wp.me/P4Uvka-d2  மஹாகவி பாரதியின் “எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்” எனும் மணிவாக்கினை நேரில் அனுபவிக்கவேண்டுமானால் அரேபிய நாடுகளுக்கு விஜயம் செய்தால் போதும்! என் அண்டை வீட்டுக்காரர் திரு. பரமேஸ்வர ஐயர் இந்திய ரயில்வேயில் முக்கிய கன்சல்டண்டாக இராக் நாட்டில் பல ஆண்டுகள் பணி புரிந்தவர். சதாம் ஹுசேன் ஆட்சியில் அங்கு அமெரிக்க குண்டு வீச்சுக்கு நடுவே எப்படியோ வாழ்ந்து முக்கிய ரயில் பாதை போடும் பணியில் இருந்தவர்!  ஒரு சமயம் அவருடைய மானேஜர்…

மகா கவியின் மகத்துவம்


மகா கவியின் மகத்துவம் டாக்டர் ராஜாராம் http://wp.me/P4Uvka-bK  பாஞ்சாலி சபதம் என்ற மகாகவி பாரதியாரது படைப்பு என்றோ நடந்து முடிந்துபோன புராண இதிகாச நிகழ்ச்சியை மட்டும் காட்டுவதல்ல. சரித்திர காலத்திலும் நீடிக்கும் பயங்கர தொடர்கதை அது. முகலாயர் ஆட்சியிலும் பின் ஆங்கிலேயர் ஆதிக்கத்திலும் சிக்கி துகிலுரிக்கப்பட்ட பாரதமாதாவே அந்தப் பாஞ்சாலி!  

திருவாசகம் தரும் செய்தி – 2


திருவாசகம் தரும் செய்தி – 2 (புலவர் கீரன் உரைகளிலிருந்து தொகுத்தது) டாக்டர் ராஜாராம் http://wp.me/P4Uvka-bl  பிடி அவல் ஆன்மீக யாத்திரை ஒரு நீண்ட பயணம். வழியில் பசிக்கும்போது கையிருப்பாக எளிய உணவான அவலை எடுத்துச் செல்கிறோம். இருப்பவல் என்ற சொல்லை திருப்புகழில் காண்கிறோம். பயந்த தனிவழிக்குத் துணை திருப்புகழே. அந்தத் ‘திருப்புகழ் அவலை’ இனிப்பு உணவாகவும் ஒரு மாற்றமாக உப்பு அவலாகவும் ருசித்து உண்ணலாம். சுதாமா கண்ணனைப் பார்க்கச் செல்லுகையில் இதைத்தானே கொண்டு சென்றார்? கெட்டுப்போகாது…

திருவாசகம் தரும் செய்தி – 1


திருவாசகம் தரும் செய்தி – 1 (புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகளின் உள்ளடக்கம்) டாக்டர். ராஜாராம் http://wp.me/P4Uvka-aZ    ஈசனின் திருவிளையாடலான பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சிக்கு மூல காரணமானவர் மாணிக்கவாசகர். எல்லோருக்கும், அடித்த அரசன் உட்பட, முதுகில் அந்த அடி விழுந்தாலும் ஈசனின் காட்சி என்ற மிக அரிதான பயன் கிடைக்க வழி  வகுத்தவர் மாணிக்கவாசகர். திருப்பெருந்துறைக் கோயில் தோன்றி சிறப்பு பெறுவதற்குக் காரணமானவர் மாணிக்கவாசகர். எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றுக்கும் உருகாத மனம் கொண்டவரையும் உருக்கி, அழவைத்து…