பெருவெடிப்பு பொய்யா?


சி. ஜெயபாரதன், கனடா http://wp.me/P4Uvka-jr   பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறக்க வில்லை ! ஆதி அந்த மில்லா அகிலம் பற்றி ஓதி வருகிறார் இன்று ! கர்ப்ப மில்லை கரு ஒன்றில்லாமல் பிரபஞ்சம் உருவாகுமா வெறுஞ் சூனியத்தி லிருந்து ? புள்ளியாய் முதலில் திணிவு இருந்தது பொய்யானது ! கருவை உருவாக்க எரிசக்தி எப்படித் தோன்றியது ? உள் வெடிப்பு தூண்டியதா புற வெடிப்பை ? பிரபஞ்சத் துக்கு முன்னிருந்தது புள்ளிக் கரு வில்லை ! பேரளவுத்…

தமிழுக்கு விடுதலை தா .. !


தமிழுக்கு விடுதலை தா .. !  சி. ஜெயபாரதன், கனடா http://wp.me/P4Uvka-g9  தமிழைச் சங்கச் சிறையில் தள்ளாதே !  தங்கச் சிறை வேண்டாம் ! ​கை கால்களில்​  ​பொன் விலங்கு பூட்டாதே !​ *******************

பூத அலைமதில் அடிப்புகள்!


இந்துமாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைமதில் அடிப்புகள்!  சி. ஜெயபாரதன், கனடா http://wp.me/P4Uvka-f4  தாரகை ஆசிரியர் குறிப்பு:  பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நாலாயிரம் உயிர்களைக் காவுகொண்ட சுனாமி(கடல்கொந்தளிப்பு)யை நினைவுகூர்ந்து ஜெயபாரதன் அவர்களால்  எழுதப்பட்ட வரலாற்று அறிவியல் கட்டுரை. காலக் குயவனின் மேளமிது! கோணிக் கைகள் வார்த்து விட்ட கோளமிது! கடல் சுழற்றும் பொரி உருண்டை இது! அடித்தட்டுக் குடலாடி வெம்பி எழும் கடல் மதில்கள் தாக்கும் ஞாலமிது!

சிற்றருவி! பேரருவி!


 சிற்றருவி! பேரருவி! சி. ஜெயபாரதன், கனடா http://wp.me/P4Uvka-ek  இறை வணக்கம் அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத் தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! – பண்டைமுதல் குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத வற்றாத் தமிழூட்ட வா ! *********** கற்றேன் கடுகளவு ! கற்க உலகளவு ! ஒற்றைப் பிறப்பெனக்கு ஒவ்வாது ! – முற்றிலும் தாரணியைக் காணத் தருணம் கிடைப்பதில்லை ! ஓரளவு தேறிடவே ஓது ! ***********

புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு


சி. ஜெயபாரதன், கனடா http://wp.me/P4Uvka-cS   2014 நவம்பர் 20 ஆம் தேதி பௌதிக விஞ்ஞான இதழ்கள் அறிவிப்பின்படி புதிய இரண்டு பரமாணுக்கள் செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டதாக அறியப்படுகிறது.  அந்த பரமாணுக்கள் இரண்டும் பாரியான்கள் [Baryons] எனப்படும் வகையைச் சேர்ந்தவை.  அவை நாமறிந்த புரோட்டான்களை விட ஆறு மடங்கு நிறையாகக் கனத்தவை.  அவற்றின் இருப்பைப் பற்றி ஏற்கனவே 2009 இல் இரு கனேடிய துகள் பௌதிக விஞ்ஞானிகள், ரான்டி லூயிஸ், ரிச்செர்டு ஒலோசியன்  [Particle…

இணைப் பிரபஞ்சங்கள் – 1


சி.  ஜெயபாரதன், கனடா http://wp.me/P4Uvka-6D   கட்டுரையைப் படிக்க மேலே சொடுக்கவும்.   ஓயாது விரியும் பிரபஞ்சத்தின் மாய வயிற்றுக் குள்ளே ஓராயிரங் கோடி ஒளி மந்தை, கருஞ்சக்தி, கருந்துளை ! பிரபஞ்சம் ஒன்றில்லை ! ஒன்றின் தொப்புள் கொடியில் ஒட்டி, வெடித்து விரிந்து செல்லும் பல்லடுக்கு அகிலங்கள் ! சோப்புக் குமிழிப் பிரபஞ்சங்கள் ! எல்லை யற்ற இணைப் பிரபஞ்சங்கள் !

முடிவை நோக்கி!


சி. ஜெயபாரதன், கனடா   டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் ! பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன ! “ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப்…