ஆண்டுவிழா!


கல்பட்டு ந்டராஜன்
நம்ம தலைவரு இருக்காறே அவரு தலைக்குள்ளற என்ன இருக்குதுன்னே எனக்குப் புரிலே.  ஏன்னா இது வரெயிலும் யாருமே செய்ய முயற்சிக்காத ஒரு காரியெத்தெ செஞ்சு முடிச்சிருக்காரு.  தெய்வத் திருமறையாம் திருக்குறளுக்கு விளக்கம் குறள் வடிவிலேயே எழுதி முடிச்சிருக்காரு.  சீக்கிரத்துலெ அது புத்தகமா வெளி வரணும்னு இறைவனெ வேண்டிக்கறேன்.  அது மட்டுமில்லெ.  அவரு அப்பொப்போ நவீன கதணிம், வெண்பா இலக்கணம்னு என்னென்னவோ சொல்லித் தராறு.  நமக்குதான் ஒண்ணும் புரிய மாட்டேங்குது.  அது வேறெ விசயம்.

Advertisements

ஆன்மீகமும் நானும் —  8


கல்பட்டு நடராஜன்
இந்த மூன்று வழிகளைத் தவிர நான்காவதாக ஒரு வழியும்யிருக்கிறது.  அதுதான் உடல் உறுப்புகள் தானம்.  இறந்தவரின் உடல் மூன்றுமணி நேரத்திற்குள் அதற்கான வசதிகள்கொண்ட மருத்துவமனைக்குச் சேர்ப்பித்தால் அந்த உடலிலிருந்து கண், கல்லீரல், மூத்திரக் காய்கள், இருதயத்தில் உள்ள வால்வுகள் போன்றவை அறுவடை செய்யப்பட்டு தேவையானவர்களுக்குப் பொருத்தப்பட்டு அவர்களுக்கு உயிர் தானம் அளிக்கப்படும்.  இதனால் நீங்களும் செத்தும் கொடுத்த சீதக்காதி ஆகலாம்.  என்றுமே சிரஞ்சீவியாக வாழலாம்.

ஆன்மீகமும் நானும் – 7


கல்பட்டு நடராஜன் ஐயப்பன் வழிபாடு – 2 1974 டிசம்பர் மாதம் முதல் 1978 ஆகஸ்ட் மாதம் வரை நான் திருச்சியில் பணிபுரிந்து வந்தேன்.  இந்தச் சமயம் எனெக்கொரு உடல் உபாதை வந்தது.  வேலைசெய்துகொண்டே இருப்பேன்.  திடீரென வயிற்றைக் கலக்கும்.  அடுத்த வினாடி நான் கழிப்பறை நாடி ஓடவேண்டும்.  சில மருத்துவர்களிடம் சென்றேன்.  ஒவ்வொருவரும் ஒரு வியாதியின் பெயர்சொல்லி மருந்தும் கொடுத்தனர்.  ஆனால் குணம் ஒன்றும் தெரியவில்லை.  கடைசியாக ஒரு ரணசிகிச்சை நிபுணரை அணுகினேன். சில பரிசோதனைகளுக்குப்…

ஆன்மீகமும் நானும் – 6


கல்பட்டு நடராஜன்
நாம் செய்யும் பூசைகள்பற்றியோ, செய்யும் செயல்களின் காரணங்கள்பற்றியோ அடுத்த தலைமுறைக்கு விளக்குவதே இல்லை.
பூசைகள் எவ்வளவு முக்கியமோ, அவை செய்யப் படுவதின் பின்னணியைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டியதும் அதே அளவு முக்கியம்தான் .
ஐயப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் சாமி என்றோ ஐயப்பா என்றோதான் அழைத்திடுவார்கள். கூட்டமாகச் செல்லும்போது ஒரு தனிப்பட்ட நபரின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்றால், ‘டாக்டர் சாமி, எஞ்சினியர் சாமி, கார் சாமி’ என்றோ தான் அழைப்பார்களே தவிர பெயர்சொல்லிக் கூப்பிட மாட்டார்கள்.

ஆன்மீகமும் நானும் – 5


கல்பட்டு நடராஜன்
ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு செய்வதுதான் தியானம் என்றில்லை. அது ஒருவகை தியானம். தன் வேலையை, கடமைகளைச் சிரத்தையுடன் செய்வதும் தியானமே.
தவம் செய்வார் தம் கர்மம் செய்வார் என்பற்கேற்ப, யாரொருவர் தமது கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாரோ அவர் தவம்செய்வதாக எண்ணவேண்டும்.

ஆன்மீகமும் நானும் – 4


கல்பட்டு நடராஜன்
மூலக்கூறுகளை எலத்திரன் நுண்நோக்கியால் (electron microscope) மட்டுமே காணமுடியும். அப்படிப் பார்க்கும்போது அவை அணுக்களால் (atoms) ஆனவை என்பது புரியும். அந்த அணுக்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. அணுக்களையும் மிகவும் சக்திவாய்ந்த எலத்திரன் மின் நோக்கியால் பார்த்தால் அணுக்கள் நேர்மின்னி, எதிர்மின்னி (protons and electrons) என்னும் கண்ணுக்குப் புலப்படாத மிகமிகச் சிறிதானவற்றால் ஆனவை என்பது தெரியும். ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் மின்னிகளின் எண்ணிக்கை மாறுபடும். அதைப் பொருத்துதான் ஒவ்வொரு அணுவுக்கும் தனித்தன்மை வருகிறது.
ஆரம்பத்தில் வெவேறு குணங்கள்கொண்ட பொருள்களாகக் காணப்பட்டாலும் இவை எல்லாமே ஒரே பொருள்களால், நேர்/எதிர்மின்னிகளால் ஆனவைகள்தான். இதையேதான் நம் ஆன்மீகமும் சொல்கிறது. இவ்வுலகில் நாம் காணும் எல்லாமே மாயைதான். அவற்றுள் இருப்பது அந்த ஈசனும் ஈஸ்வரியும்தான்

ஆன்மீகமும் நானும் –  3


கல்பட்டு நடராஜன் 1964 – 68 களில் நான் பங்களூரில் வேலை பார்த்து வந்தேன்.  அப்போது எங்கள் வீட்டுக்காரர் வீட்டிற்கு ……. மடத்தில் இருந்து ஒரு ….. ஆச்சாரியா வந்திருந்தார்.  வீட்டுக்காரரின் சிற்றன்னை எங்களை வந்து …. ஆச்சாரியாவை நமஸ்கரித்து ஆசிவாங்கிக்கொள்ள அழைத்தாள்.  எனக்கு அங்கு போவதில் ஈடுபாடு இல்லை.  ஆனால் என் மனைவி விடுவதாக இல்லை. அணிந்திருந்த சட்டை, கால்சட்டையுடன் கிளம்பினேன்.  மனைவி நான் பட்டுவேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்து வரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.  வேறுவழி…

ஆன்மீகமும் நானும் – 2


கல்பட்டு நடராஜன்
பல நாள்களாக ‘வருகிறேன் வருகிறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்த உங்கள் நண்பர் தன் மனைவி குழந்தையுன் வருகிறார். அவரை வரவேற்று உள்ளே செல்கிறீர்கள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தமின்றிப் பதிலளிக்கிறிர்கள். உங்கள் உடல் அங்கிருந்ததேயொழிய மனம் இங்கு இருந்தது. இதுதான் இன்று நம் எல்லோரிடமும் ஏற்படும் மனதுக்கும் உடலுக்குமான போராட்டம். இந்தப் போராட்டத்தில் வெற்றிபெறுவது எப்படி என்பதை நமக்குச் சொல்லித்தருவதுதான் சனாதன தர்மம் என்றழைக்கப்படும் நமது இந்துமதம்.

ஆன்மீகமும் நானும் – 1


கல்பட்டு நடராஜன்
பூஜையில் கலந்துகொள்ளவேண்டும் எனப் பிடிவாதம்பிடித்து என்னை அழைத்துவந்தது என் தாய்.. அவளுக்கில்லாத பிரசாதம் எனக்கும் வேண்டாம்,” என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினேன. அன்று வீட்டிற்கு வந்தபின் நான் பேசிய வார்த்தைகளை இங்கு எழுதினால் நன்றாயிராது.

இறைவனிடம் உங்கள் விண்ணப்பத்தினை அளிக்க வேண்டுமா? அதற்கு இடைத் தரகர்கள் தேவை இல்லை. நீங்களே நேராக உங்கள் கோரிக்கைகளை அவன்முன் வைக்கலாம்.