ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!


ஒரு அரிசோனன்
ஆங்கிலம்மட்டுமே பேசவல்ல இந்த ஸோஃபியா, தனக்குக் குடியுரிமை வழங்கப்பட்டவுடன், சவூதி அரேபியாவில் அங்குள்ள பல்வேறு அரசு அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள் முன்வந்து, அங்கு பெண்கள் வழக்கமாக அணியவேண்டிய, அரசினால் கட்டாயப்படுத்தப்பட்ட முக்காட்டை [அபயா] அணியாமல், பேசியது இதுதான்:
“இத்தகைய தனிச்சிறப்பினால் நான் மிகவும் பெருமையும், கௌரவமும் அடைகிறேன்.  உலகத்திலேயே முதன்முதலாகக் குடியுரிமை வழங்கப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்ட ரோபாட் என்பது வரலாகிறது.”

Advertisements

காப்டனைக் கேளுங்கள்! — 3


ஆங்கில மூலம்:  ஜான் காக்ஸ், யு.எஸ்.ஏ டுடே — தமிழாக்கம்:  ஒரு அரிசோனன்
விமானத்தில் சிக்கனமாக எரிபொருள் நிரப்பியிருக்கும்போது இப்படிப்பட்ட அதிகமான காலதாமதம் ஏற்பட்டால் அதிகப்படி எரிபொருளுக்காக விமானி கேட்டிற்குத் திரும்பவேண்டி நேரிடும். கண்டம்விட்டுக் கண்டம் செல்லும் பெரியவிமானங்களில் எரிபொருளை வெளியேற்றும் வசதியுள்ளது.  இறக்கைகளின் நுனியிலுள்ள வால்வுகள்மூலம் எரிபொருள் பம்ப்செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு ஆவியாகிறது. 

கையாலாகாதவனாகிப்போனேன் — 6


ஒரு அரிசோனன்
” நீங்கள் ஜப்பானியராகத்தான் இருக்கவேண்டும்!” என்று ஜேம்ஸ் பான்ட் பாணியில் ஏதோ ஒரு இரகசியத்தைக் கண்டுபிடித்ததுபோலச் சொன்னேன்.

பழையபடியும் இல்லை என்பதுபோலத் தலை ஆடியது.  ஆனால் அவர் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.  “நான் ஒரு கொரியன்.” என்று பதில் சொன்னார்.
திடுமென்று ஒருநாள் முன்னறிவிப்பின்றி எங்கள் வீட்டிற்கு வந்தவர், “நான் படிப்பை விட்டுவிடப் போகிறேன்!” என்று சொன்னபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது.  காரணம்சொல்ல மறுத்துவிட்டார்.  சிலமணி நேரம் எங்களுடன் பேசிவிட்டு, எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு, எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

காப்டனைக் கேளுங்கள்! – 2


ஆங்கில மூலம்:  ஜான் காக்ஸ், யு.எஸ்.ஏ டுடே — தமிழாக்கம்:  ஒரு அரிசோனன்
பெரிய விமானங்களில் அவற்றின் அளவினால் தேவைக்கும் அதிகமான அமைப்புமுறைகள் உள்ளன.  அவை மட்டுமே ஒரு விமானத்தை இன்னொன்றைவிடப் பாதுகாப்பானதாக ஆக்கிவிடமுடியாது.
நவீனகாலத்திய ஜெட் எஞ்சிங்களின் நம்பிக்கைத் தன்மை மிகவும் சிறந்திருப்பதால் மாக்கடல்களின் மேலேயோ, வெகுதூரத்திலிருக்கும் இடங்களுக்குப் பறப்பதோ அபாயகரமானதல்ல. 

திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்


ஆங்கிலம்: ஸர் கந்தையா வைத்தியநாதன்[1] — தமிழாக்கம்: ஒரு அரிசோனன்
எகிப்து, மெசபடோமியா, பாலஸ்தீனம், கிரேக்க, ரோமானிய நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியாக கடல்வழி வணிகம் அக்காலத்தில் நடந்துவந்தது. அந்நாட்டார் தென்மேற்குப் பருவமழைக்குப் பயந்தனர்.  அதன் சீற்றத்திலிருந்து மாந்தோட்டத் துறைமுகம் புகலிடமளித்தது. அதற்குக் காரணம் தெற்கிலுள்ள மன்னார் தீவும், ராமர் அணையும்தான்.  அக்காலத்தில் மன்னார் தீவுக்கும், இலங்கை நிலத்திற்கும் இடையுள்ள நீர்ப்பரப்பு இருபருவமழைகளால் ஏற்படும் கடல் நீரோட்டத்தால் மணல்தட்டாமல், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.
இராமேஸ்வரம் கோவிலுக்கு நிகரான சிறப்புடன் திருக்கேதீஸ்வரம் கோவில் விளங்கியது.  செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர்

காப்டனைக் கேளுங்கள்! – 1


ஆங்கில மூலம்:  ஜான் காக்ஸ், யு.எஸ்.ஏ டுடே — தமிழாக்கம்:  ஒரு அரிசோனன்
SR-71 விமானம் சிறப்பான இறக்கைகளுள்ளபடியால் சாதாரணமாக எண்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கிறது.  ஸ்பேஸ் ஷட்டில் கீழிறங்கும்போது லட்சம் அடி [30500 மீ] உயரத்திலேயே உபயோகப்படுத்தக்கூடிய அளவு காற்றை எதிர்கொள்கிறது.  மேலும், அது தனிப்பட்ட இறக்கைகளையும், வடிவமைப்பையும் கொண்டது.
சான்றிதழ் வழங்கச் சோதனை செய்யும்போது, வானூர்திகள் விதித்த உச்சவரம்புக்குமேல் பறக்கும்.  ஆயினும் அவற்றின் செயல்பாடு குறைவாகவேயிருக்கும். பொதுவாகச் சொன்னால், எடையையும் வெப்பத்தையும் பொறுத்து விதிக்கப்பட்ட உச்சவரம்பிற்குமேல் அவை பறக்கக்கூடும்,

கையாலாகாதவனாகிப் போனேன்! – 5


ஒரு அரிசோனன்
நீ இப்படிச் செஞ்சா, தன்னை நூறோட நூத்தொண்ணா நினைக்கறேன்னுதான் எம்ப்ளாயர் நினைச்சுப்பான்.  உடனே, உன்னைக் கொறச்சு எடைபோட்டு, உன் அப்ளிகேஷனைக் குப்பையிலே தூக்கிப் போட்டுடுவான்.  அது ஒனக்கு வேணுமா?  என் ஆபீஸுலயோ நல்ல ரெமிங்டன் டைப்ரைட்டர் சும்மா தூங்கறது.  உனக்கோ டைப்ரைட்டிங் தெரியும்.  ஸோ, ஒரொரு அப்ளிகேஷனையும் அப்பப்ப புதுசா போட்டிருக்கற வேலைக்குத் தகுந்தமாதிரி டைப்படிச்சு அனுப்பு, என்ன நான் சொல்றது?

கையாலாகாதவனாகிப் போனேன்! – 4


ஒரு அரிசோனன்
கல்யாணச் சாப்பாடு!
ஒரு நல்ல நண்பனை இழந்த ஏமாற்றம் எனக்கு. நாய் தனியேசென்று தனது காயத்தை நக்கிக் குணப்படுத்திக்கொள்வதுபோல, எதிலும் கலந்துகொள்ளாமல் நானுண்டு, எனது படிப்புண்டு என்று தனித்திருந்து என் இதயப்புண்ணை எண்ணங்களால் நக்கிப்பார்த்து — தங்கரத்தினமும் நானும் சிவகங்கையிலும் காரைக்குடியிலும் நட்புடன்பழகிய நாள்களை எண்ணியெண்ணிப் பார்த்து — அது ஒரு கனவாகவே இருந்துவிட்டுப்போகட்டும் என்று மெதுவாகத் தன்னிலைக்குத் திரும்பிவந்து, ஜிட்டு குழாத்தின் நிழலில் குளிர்காயத்துவங்கினேன்.

கையாலாகாதவனாகிப் போனேன்! – 3


ஒரு அரிசோனன்
3. புது புஷ்கோட்டு!
அப்பொழுது ரெடிமேடு ஆடைகள் மிகக் குறைவு. மேலும் அவை விலை அதிகம் என்பதால் தையற்காரரிடம் அளவெடுத்தே தைக்கப்படும். என்னைப்போன்ற — அதாவது வளரும் சிறார்களுக்கு புத்தாடைகள் தைக்கும் அழகே தனி. புத்தாடை அணிந்துவரும் எங்களுக்கும் சோளக்கொல்லைப் பொம்மைகளுக்கும் அதிக வேறுபாடு காணமுடியாது.
அறைத்த சந்தன நிறத்தில் ஒரு புஷ்கோட்டும், முழுக்கால் சட்டையும் அதில் இருந்தன. அரைக்கை சட்டையையும், அரைக்கால் டிராயரையும் தவிர வேறு எதையும் அணிந்து அறியாத எனக்கு அளவுகடந்த ஆனந்தம் மனதில் கரைபுரண்டோடியது.

கையாலாகாதவனாகிப்போனேன்! — 2


ஒரு அரிசோனன்
2. மூக்குக்கண்ணாடி
“வேண்டாம். கண்ணாடியைக் கழட்டக்கூடாதுன்னு வீட்டிலே சொல்லியிருக்காங்க இல்லையா? எனக்கே நீ ஒருதடவைகூட..” என்று எச்சரித்த எனது மாமன்மகனையும் பொருட்படுத்தாது என் கண்ணாடியை முனுசாமியிடம் நீட்டினேன்.
“ஆயா, கண்ணு நல்லாத் தெரியுது ஆயா! ஒம் மூஞ்சிலே இவ்வளோ சுருக்கம் இருக்குன்னு இப்பத்தான் பாக்குறேன்.” இதுவரை கண்டிராத மூதாட்டியின் முதுமையைக் கண்டதில் அவனுக்கு அவ்வளவு பரவசம்!
“கோயில் கோவரத்திலே எத்தன பொம்மைக இருக்கு, ஆயா! இதுவர அதுக இருக்குன்னுகூட எனக்குத் தெரியல. இது மாயக்கண்ணாடிதான், ஆயா!”

அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார்சதுர்த்தி பிரம்மோத்சவம்


ஒரு அரிசோனன்
பேருருவப் பிள்ளையாருக்கு [விஸ்வரூப கணபதி] மலர்மாலை சூட்டி அலங்காரம்செய்யப்பட்டது. ஏனெனில் ஆண்டுக்கொருமுறை அவர் பவனிவரும் தினமாயிற்றே அன்று!
எட்டடிக்கும் அதிகமான உயரமுள்ள அவரை ஊர்வலமாகக் கொண்டுசெல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன! இருப்பினும், அதற்குச் சளைத்தவர்களா அவரது அடியார்கள்!

கையாலாகாதவனாகிப் போனேன்! – 1


ஒரு அரிசோனன்
சில நிகழ்வுகள் – நம் அடிமனத்தில் ஆழமாகப் புதைந்துபோனாலும், அவ்வப்போது, திரும்பத்திரும்ப மேலெழுந்துவந்து நம்முள் ஒரு ஏக்கத்தை, நமது கையாலாகாத்தனத்தை நமக்கு உணர்த்தி, குற்ற உணர்வை அதிகமாக்கி நிற்கத்தான் செய்கின்றன.
வண்டியோட்டி அடித்தது போதாதென்று, மாட்டைப் பலமாக உதைத்து, அதன் வாலைத்தூக்கி, அதற்குக்கீழே இருக்கும் மென்மையான பாகத்தில் தார்க்குச்சியினால் இரண்டு-மூன்று முறை முழுபலத்துடன், நாக்கைத் துருத்திக்கொண்டு, ஆவேசத்துடன் குத்தினார்.
என் தங்கை அழுதாலே பொறுக்காமல், “பாப்பாவைத் தூக்கு, அம்மா!” என்று முறையிடும் என்னால் அதைக் காணச்சகிக்கவில்லை.