விளம்பி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!


உலகத் தமிழ் விண்மீன்களுக்குத் ‘தாரகை’யின் “விளம்பி” தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Advertisements


உலகத் தமிழ் விண்மீன்கள் அனைவருக்கும் “தாரகை”யின் இதயம்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

கல்பட்டு நடராஜன் காலமானார்


  “ஆன்மீகமும் நானும்” தொடர்கட்டுரையை எழுதிய கல்பட்டு நடராஜன் அவர்கள் இதய அறுவை சிகிச்சையின்போது காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.  அன்னாருக்கு வயது 88.  அவரது மனைவியாருக்கும், மூன்று மகள்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்குத் தாரகையின் மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா அமைதி அடைவதாக!    

துர்முகி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


“தாரகை”யைச் சிறக்கவைத்திருக்கும் உலகத்திலுமுள்ள அனைத்துத் தமிழ் விண்மீண்களுக்கு இனிய துர்முகி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக!    

மல்லல் மூதூர் மதுரை


முனைவர் பாண்டியராஜா அவர்கள் எழுதிய “மல்லல் மூதூர் மதுரை” என்ற வரலாற்று ஆராய்ச்சிக்கட்டுரை விரைவில் தாரகையில் மறுபகிர்வாக வெளிவருகிறது.  தமிழ் மூவேந்தர்களில் ஒருவராகிய பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கி, சங்கத்தமிழ் வளர்த்த மதுரையைப் பற்றிய இக்கட்டுரையைப் படித்துப் பயனடைய தமிழ் வானில் நீந்தித் திரியும் விண்மீன்களை வரவேற்கிறோம்.

இனி என்னைப் புதிய உயிராக்கி…


மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் எழுதும் “இனி என்னைப் புதிய உயிராக்கி…” என்னும் தொடர்கதை ஓரிரு நாள்களில் துவங்க இருக்கிறது.  பெண்களின் மனநிலையைப் பற்றிய புதினம் இது.  புதிய கோணத்தில் எழுதப்பட்ட இதை தமிழ் விண்மீன்களான நீங்கள் இரசித்து மகிழ்வீர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை! ***

தமிழ் இனி மெல்ல…


  தமிழ் இனி மெல்ல… http://wp.me/P4Uvka-he  ஒரு அரிசோனனின் புதின வெளியீட்டு நிகழ்ச்சி! நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழன்பர்களை வரவேற்கிறோம். Sunday, Feb 15, 2015 –  4.00 P.M to 6.P.M. The Venue: Youth Hostel, 2nd Avenue, Indira Nagar Chennai, Tamil Nadu 600020 India  இது தமிழின் கதை.  எதிர்காலத்தையும், தமிழ் மன்னர்களின் சிறப்பான ஆட்சியையும் இணைகிறது. தற்பொழுதைய நிலை நீடித்தால் தமிழ் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன், அந்த…