தாரகையைப் பற்றி…

தமிழ் வானத்தில் பளிச்சிடும் விண்மீன்களே,

     உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் தமிழர்களுக்கும், தமிழ் விரும்பிகளுக்குமான இணையம் இது.  புதுமை, பழமை, இலக்கியம், ஆராய்ச்சி, ஓவியம், நிகழ்சிகள், கவிதை, கட்டுரை, கதை என்று அனைத்தும் இங்கு பளிச்சிடும்.  இதை மேம்படுத்துவது உங்கள் கையில்தால் இருக்கிறது.  எனவே, உங்கள் படைப்புகளை tharakai.editor@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இங்கு பளிச்சிடும் படைப்புகளுக்கு உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

     மதுரை கடைச் சங்கத்தில் புலவர்களின் படைப்பைத் தாங்கி நின்ற பொற்றாமரைப் பலகையைப்போல உங்கள் தாரகை உங்கள் படைப்புகளைத் தாங்கி நிற்கும்.

குறிப்பு:  தாரகையில் வெளிவரும் படைப்புகளின் உரிமை படைப்பாசிரியர்களுக்கே.  படைப்பின் கருத்துக்கள் ஆசிரியர்களின் கருத்தேயன்றி, தாரகை ஆசிரியக்குழுவின் கருத்தல்ல, தாரகை அதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாது.  எந்தப் படைப்பும் எவரின் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல.

பொற்றாமரை

பொன்மலர் நாற்றமுடைத்து!

Advertisements

9 thoughts on “தாரகையைப் பற்றி…

 1. தமிழுக்கென ஒரு தாரகை இணையத்திலும் பூத்திருப்பதை எண்ணி மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  வித்யாசாகர்

  Like

 2. தாரகை பொதுவாகக் கண்சிமிட்டும். ஆனால் இந்தத் தாரகை விண் ஒளிர்க்கும் என நம்புகிறேன். முயற்சிக்கு வாழ்த்துக்கள். ப.பாண்டியராஜா

  Like

 3. தாரகைச் செந்தமிழ்நூல் தாரணிக் காப்பியமாம்;
  நேர்மை, திறமை நெறியாகும் – ஆர்வமுடன்
  நற்றமிழில் ஆக்கங்கள் நாட்டும் அரிசோனன்
  பெற்றவரம் ஆகும் பிழைப்பு.

  தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் நம் கடமை. சென்றிடுவோம் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் சேமிக்க.

  சி. ஜெயபாரதன், கனடா
  மார்ச்சு 27, 2015

  Like

  • தங்கள் கவிதைக்கு நன்றி, தேமதுரத் தமிழோசையை உலகமெங்கும் பரவும் வகை செய்வோம்! எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் சேமிப்போம்!

   Like

 4. மதிப்பிற்குரிய ஐயா/ அம்மா,

  உயர் மென் நுட்பத்தில் சங்க இலக்கியங்கள் என்ற தலைப்பில்
  ஆய்வுக்கட்டுரைகள் கவிதைகள் சமர்பிக்க எனக்கு தங்களின்
  மேலான வலைப்பக்கத்தில் வாய்ப்பு வழங்கப்படுமா?

  வேண்டும்,

  Like

  • தாராளமாக அனுப்பிவையுங்கள். tharakai.editor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள். மைக்ரோசாப்ட் வோர்ட் ஆவணத்தில் இருந்தால்தான் எங்களால் வடிமைத்து வெளியிட இயலும்.
   தாரகை ஆசிரியர்

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s