கழுதைக்குக் கல்யாணம்!?


கே. செல்வன்
மூதேவி என்பது திட்டும் வார்த்தையாக இன்று ஆகியிருந்தாலும் மூதேவியின் வரலாறு நம் மரபுகளுடன் நீண்ட தொடர்புடையது.
புராணங்களின் படி மூதேவி திருமகளுக்கு மூத்தவள். பாற்கடலை கடைகையில் மூதேவி முன் தோன்றி, அதன்பின் ஸ்ரீதேவி தோன்றினாள். முதலில் தோன்றியதால் மூத்த தேவி-> மூதேவி என மருவியது என்பார்கள். அதனால் வடக்கே மூத்தவள் என்பதை குறிக்கும் ஜேஷ்டா தேவி எனும் பெயரும் உண்டு.
தமிழில் மூதேவிக்கு அழகாக தவ்வை என்ற பெயருண்டு. வள்ளுவர் இரு குறள்களில் மூதேவியை பற்றி குறிப்பிடுகிறார்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
(பொறாமை பிடித்தவனை தன் தமக்கைக்கு (மூதேவிக்கு) காட்டிவிட்டு திருமகள் விலகிவிடுவாள்)
இன்னொரு குறளில்
மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரை யினாள்
சோம்பலுள்ளவனிடம் மாமுகடி (மூதேவி) தங்குவாள். சோம்பலில்லாதவனிடம் திருமகள் தங்குவாள் என்கிறார்.
ஆக மூதேவிக்கு மாமுகடி, தவ்வை என அழகான இரு தமிழ்ப்பெயர்கள் உண்டு. குப்பையில் தங்கியதால் குப்பம்மாள் எனும் பெயரும் அவளையே குறிக்கிறது என்பதுண்டு.
மூதேவியின் வாகனம் கழுதை. காக்கைக் கொடியை ஏந்தியவள். அதனால் “காக்கைகொடியோள்” எனவும் இவள் அழைக்கப்டுவதுண்டு. இவளது ஆயுதம் விளக்குமாறு. காக்கை சனீசுவரனின் வாகனம் என்பதால் இவளது கணவன் சனீசுவரன் எனவும் கூறுவதுண்டு. ஒற்றை சடையை அணிந்தவள் என்பதால் ஏகவேணி எனும் பெயரும் உண்டு.
ஆக கழுதைக்கும் மூதேவிக்கும் இருக்கும் தொடர்பாலேயே பழங்காலத்தில் ஒருவரை அவமதிக்க கழுதை மேல் ஏற்றி, மொட்டை அடித்து ஊரை சுற்றிவர வைக்கும் வழக்கம் உண்டாயிற்று. படை எடுத்து எதிரிநாடுகளை பிடித்து அவற்றின் வயல்களை கழுதையால் உழுது சாபமிடும் வழக்கமும் உண்டு. அந்த வயல்களில் மூதேவி தங்கி விளைச்சல் இல்லாமல் போகும் என நம்பிக்கை.
ஆனால் வரலாற்று ரீதியில் மூதேவி சில நன்மைகளையும் செய்துள்ளாள். மூதேவி பரவலாக சில சடங்குகளில் வழிபடவும் பெற்றுள்ளாள். கெடுதலை செய்யும் சனிபகவானும் வழிபடப்படுவதுபோலவே இதுவும் எனப் புரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் பல்லவர் ஆட்சிகாலத்தில் சில கோயில்களில் மூதேவி வழிபடப்பட்டுள்ளாள். மூதேவிக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. வயிறுபெருத்த தாய்மை தெய்வங்களில் அவளும் ஒருத்தி. இவளது மகன் மாட்டு முகம் உள்ளவன். மாந்தன் அல்லது குளிகன் எனப் பெயர். குளிகன் சோதிடத்தில் நல்லகாலத்திற்கு அதிபதி. மகள் பெயர் மாந்தி.
குப்பையில் தங்கியதால் குப்பம்மாள் எனும் பெயரும் அவளையே குறிக்கிறது என்பதுண்டு.
கழுதைக்குக் கல்யாணம் செய்துவைத்தால் மூதேவியின் மனம்குளிர்ந்து மழைபெய்யும் என நம்பிக்கை. அதேபோல மழை தொடர்ந்துபெய்து வெள்ளம் ஏற்பட்டால் அதை நிறுத்த வானைநோக்கி விளக்குமாரைக் காட்டுவதும் ஒரு நம்பிக்கை. மூதேவியின் ஆயுதத்தைக் கண்ட மழை அச்சமடைந்து பெய்யாமல் நின்றுவிடும். கழுதையை எதிரே கண்டால் நல்ல சகுனம். ஏனெனில் ஊர் அழுக்கை எல்லாம் ஏற்றிக்கொண்டு அதைத் துவைக்க அல்லவோ கழுதை செல்லுகிறது?
ஆக நமக்கே தெரியாது மூதேவி நம் மரபுகளில் இத்தனை ஆழமாக ஊன்றியிருக்கிறாள்.

தச்சூரிலுள்ள ஜேஷ்டாதேவியின் சிலை

***
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s