அறுபடைவீடு பாதயாத்திரை – 10


முனைவர் நா.கி. காளைராஜன்

துன்முகி வைகாசி – 12 (25.05.2016) புதன் கிழமை

IMG_20160526_085011.jpgஇன்று காலை 02.15 மணிக்கு சோத்துப்பாக்கம் திருமணமண்டபத்திலிருந்து புறப்பட்டு 25 கி.மீ. நடந்து உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீ நூக்கலம்மன் ஆலயத்தை  அடைந்தோம்.

மாலை நேரத்தில் யாத்திரிகர்கள் சிலர் உத்திரமேரூரில் உள்ள அருள்மிகு காமாட்சி உடனாய கைலாசநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டோம்.  மிகவும் பழைமையான கோயில்.  கோயிலில் பழைமையான கல்வெட்டுகள் நிறைந்து காணப்பட்டன.

அடுத்து பேருந்து நிலையம் அருகில் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்தோம். இங்கும் ஏராளமான கல்வெட்டுகள் இருந்தன.

அதன்பின்னர் அருள்மிகு சுந்தரவரதராசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ வைகுண்டவாசபெருமாள் கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்தோம்.

இங்குள்ள மிகவும் பழைமையான சிற்பங்களில் குடை, சாமரம், அம்மணம், சம்மணம் முத்திரைகளைக் காணமுடிந்தது.  இந்த முத்திரைகள் எல்லாம் இந்துக்களின் வழிபாட்டுமுறைகள் என்பதையும், இந்த வழிபாட்டுக் குறியீடுகளுக்குத் தாங்களே காப்புரிமை பெற்றதுபோல் எடுத்துக் கூறி, இந்துக்களை மதமாற்றம் செய்துள்ளனர் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அருள்மிகு சுப்பிரமணியர் சந்நிதியில் வழிபட்டோம்.  இங்கு சுப்பிரமணியருக்கு யானை வாகனம்.

மதியம்  காசிஸ்ரீ தனசேகரன்  காஞ்சிபுரம் சென்று அங்கு நாளை வைகாசி 13ஆம் நாள் தங்குவதற்குரிய இடத்தைப் பார்வையிட்டு மண்டபத்தை உறுதி செய்துவிட்டுத் திரும்பினார்.

துன்முகி வைகாசி – 13 (26.05.2016) வியாழக் கிழமை

IMG_20160531_105934.jpgகாலை உத்திரமேரூர் கோயிலில் இருந்து புறப்பட்டு 31 கி.மீ. நடந்து சின்னக்காஞ்சிபுரத்தை  அடைந்தோம்.

நாங்கள் தங்கியிருந்த மண்டபத்திற்குச் செல்லும் வழியில் இருந்த கோயில்களின் வாயிலில் நின்று வணங்கினோம்.  சின்னக்காஞ்சிபுரத்தில் இருக்கும் ‘திருமுறை அருட்பணி அறக்கட்டளை‘ மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.  யாத்திரிகர்களில் சிலர் ஒன்று சேர்ந்து மண்பட வாடகையை கொடுத்து உதவினார்கள்.

காசிஸ்ரீ தனசேகரன்  சேந்தமங்கலம் சென்று அங்கு மறுநாள் தங்குவதற்குரிய இடத்தைப் பார்வையிட்டு உறுதி செய்துவிட்டுத் திரும்பினார்.

துன்முகி வைகாசி – 14 (27.05.2016) வெள்ளிக் கிழமை

காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு 21 கி.மீ. நடந்து  சேந்தமங்கலத்தில் இருக்கும் பாரத்வித்யா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தங்கினோம்.

பசுமையான வயல்கள் சூழ்ந்து இருந்தன.  பள்ளி அருகே வயலில் இருந்த கிணற்றில் யாத்திரிகர்கள் அனைவரும் குளித்து மகிழ்ந்தனர்.

துன்முகி வைகாசி – 15 (28.05.2016) சனிக் கிழமை

காலை  சேந்தமங்கலத்தில் இருந்து புறப்பட்டு 13 கி.மீ. நடந்து அரக்கோணம் சோதிநகரில் இருக்கும் குமாரராசா திருமண மண்டபத்தில் தங்கினோம்.

இரவு தினமணி பத்திரிகை நிருபர்  பச்சைக்காவடி அவர்களைப் பேட்டி எடுத்துச் சென்றார்.

துன்முகி வைகாசி – 16 (29.05.2016) ஞாயிற்றுக் கிழமை

காலை மணி 05.40க்கு திருத்தணிகை சென்றடைந்தோம்.

திருத்தணி நகரவிடுதியின் சார்பாக நகரத்தார்கள் யாத்திரிகர்களுக்கு மேளதாளம் வைத்து, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வரவேற்று நகரவிடுதிக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் நகரவிடுதியில் இருந்த அனைவரையும் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.

திருத்தணிகை பரம்பரை குருக்கள் அவர்கள் நகரவிடுதிக்கு வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றார்.

துன்முகி வைகாசி – 17 (30.05.2016) திங்கப்ள் கிழமை

காலை 8.00 மணிக்கு மூலவருக்கு நடந்த பஞ்சாமிர்த அபிடேகத்தில் எல்லோரும் பங்குபெற்று சுவாமி தரிசனம் செய்தோம்.  அபிடேகத்தின்போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால்  ஏழு ஏழு பேர் கொண்ட குழுவாக அர்த்தமண்டபத்தில் அமர்ந்து தணிகை வேலவனை ஆனந்த தரிசனம் செய்து கொண்டோம்.  சுவாமிக்கு சாற்றியிருந்த பட்டை எடுத்து குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குப் போர்த்தி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர்.

மதியம் 12.30 மணிக்கு குருசாமி பச்சைக்காவடி, காசிஸ்ரீ தியாகராசன், ஓட்டுனர் ஆறுமுகம் மூவரும் மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு 01.00 மணிக்கு அன்னதான வண்டியில் திருத்தணியிலிருந்து திரும்பிப் புறப்பட்டனர்.
திருத்தணியில் விடுதியில் இருந்த யாத்திரிகர்களும் சமையல்காரர்களும் மாலை  புறப்பட்டு திருத்தணி தொடரி நிலையத்தை அடைந்து, மின்வண்டியில் பயணித்து இரவு சென்னை அடைந்தோம்.  .

அனைவரும் சென்னை இராமேச்சுரம் விரைவு வண்டியில் காரைக்குடிக்குப் பயணித்தோம்.

துன்முகி வைகாசி – 18 (31.05.2016) செவ்வாய்க் கிழமை

20160530_092519.jpg

அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்

குருசாமி பச்சைக்க்காவடி அவர்கள் வலையபட்டியில் இருந்து அன்னதானவண்டியில் புறப்பட்டு காரைக்குடி தொடரி நிலையத்திற்கு வந்து காத்திருந்து விரைவுவண்டியில் வந்த யாத்திரிகர்களை வரவேற்று ஆசிர்வதித்தார்.  காரைக்குடி தொடரி நிலையத்திலிருந்து ஒரு சிற்றுந்து மூலம் யாத்திரிகர்கள் அனைவரும் புறப்பட்டு காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களது இல்லத்தை அடைந்தோம்.  அங்கே அனைவரும் குளித்து காலைஉணவு சாப்பிட்டோம்.  அங்கிருந்து புறப்பட்டு ஆலத்துப்பட்டிக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டோம்.

பின்னர் வயிரவன்பட்டி வந்து வழிபாடு செய்து கொண்டு, பிள்ளையார்பட்டி சென்று அருள்மிகு கற்பகவிநாயகருக்கு நடந்த மாலைநேர அபிடேகத்தைப் பார்த்து சுவாமி தரிசனம் செய்து கொண்டோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்பினோம்.

“வாழ்கமன்னவன்செங்கோன்மழைமுகில்
வாழ்கநான்மறைவாணவர்கணானிலம்
வாழ்கவைதிகசைவமலர்த்திரு
வாழ்கவஞ்செழுத்துண்மைநன்மந்திரம்“

அறுபடைவீடு பாதயாத்திரை இறையருளால் இனிதே முற்றிற்று.  முருகனின் திருவருள் இந்தப் பயணக்கட்டுரையைப் படித்தோருக்கும் ஆகுக.

ஓம் சரவணபவ.
சுபம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s