அறுபடைவீடு பாதயாத்திரை – 9


முனைவர் நா.கி. காளைராஜன் 

துன்முகி வைகாசி – 7 (20.05.2016) வெள்ளிக் கிழமை

கடலூரில் இருந்து புறப்பட்டு 14 கி.மீ. நடந்து தவளக்குப்பம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  அங்கு காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களின் குடும்பத்தினர் வந்திருந்து யாத்திரிகர்களை வரவேற்று மைசூர்போண்டா தேநீர் கொடுத்து உபசரித்தனர்.

பாண்டிச்சேரி நகரத்தார் சங்கத்தின்ர் தவளக்குப்பத்திற்கு வந்து யாத்திரிகர்களை வரவேற்று வழிகாட்டி அழைத்துச் சென்றனர்.  அங்கிருந்து சுமார் 5 கி.மீ. நடந்து பாண்டிச்சேரி முருங்கம்வாக்கத்தில் உள்ள நகரத்தார் விடுதியை அடைந்தோம்.

உடல்நலத்தைப் பாராது ஊர் ஊராய்த் தேடித் திரிந்து ஏடுகளைச் சேகரித்த பெரும் புண்ணியவான் — மின்தமிழ் குழும நண்பர்  அண்ணாமலை சுகுமாரன் ஐயாஅவர்களும், அவரது நண்பரும் வந்து என்னை நலம் விசாரித்தனர்.  பின்னர் குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றனர்.

மாலை நேரத்தில் பாண்டிச்சேரி மணக்குளம் விநாயகர் கோயிலுக்குச் சென்று வணங்கினோம்.

துன்முகி வைகாசி – 8 (21.05.2016) சனிக் கிழமை

இன்று புதுச்சேரியில் ஓய்வு நாள்.  இன்று காலை மதியம் இரவு உணவைப் பாண்டிச்சேரி நகரத்தார் சங்கத்தினர் சார்பில் வழங்கி யாத்திரிகர்களை உபசரித்தனர்.

துன்முகி வைகாசி – 9 (22.05.2016) ஞாயிற்றுக் கிழமை

காலை 02.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு 25 கி.மீ. நடந்து 09.00 மணிக்கு தைலாபுரம் ஸ்ரீ தனலெட்சுமி திருமண மண்டபத்தில் தங்கினோம்.

இந்த மண்டபத்தை காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களின் தம்பி திரு. நடராசனும்,  திரு.தொப்பை அவர்களின் மகன் திரு. சசிகுமார் அவர்களும் சேர்ந்து ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

மாலை  யாத்திரிகர்கள் சிலர்  தைலாபுரம் அருள்மிகு தையல்நாயகி உடனாய மருந்தீசுவரர் கோயிலுக்கும், அதே வளாகத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபட்டுவிட்டுத் திரும்பினர்.

இங்கு பழைமையான நந்தி இருப்பதைக் கண்டு, சுயம்புலிங்கம் எங்கே என்று கேட்டேன்.  கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்த போது, சுயம்புலிங்கத்திற்குக் கூரைக் கொட்டகை போட்டு இருந்தனராம். ஒருநாள் ஏற்பட்ட தீ விபத்தில் சிவலிங்கமும் எரிந்து போனது என்றார் கோயில் பூசாரி.  கோயிலில் வைத்தியம் தொடர்பான யந்திரங்களைக் கருங்கற்களில் எழுதிப் பதித்து வைத்துள்ளனர்.

துன்முகி வைகாசி – 10 (23.05.2016) திங்கள் கிழமை
காலை தைலாபுரத்தில் இருந்து புறப்பட்டு 20 கி.மீ. நடந்து திண்டிவனம் அரிகிருஷ்ணன் கல்யாண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.

துன்முகி வைகாசி – 11 (24.05.2016) செவ்வாய்க் கிழமை

 திண்டிவனத்தில் இருந்து புறப்பட்டு 29 கி.மீ. நடந்து அச்சிறுபாக்கம் ஆதிபராசக்தி பள்ளிக்கூடத்தில் தங்கினோம்.

aru a.jpgவழியில் அருள்மிகு ஸ்ரீ சுந்தரபுரீசுவரர் திருக்கோயில் வாயிலில் சிறிது நேரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.   அங்கிருந்து புறப்பட்டு தொழுபேடு என்ற இடத்தில் காலை உணவு சாப்பிட்டோம்.
மாலை 04.45 மணிக்குப் புறப்பட்டு 5 கி.மீ. நடந்து மேல்மருவத்தூர் வழியாக சோத்துப்பாக்கம் NVM திருமண மண்டபத்தை அடைந்து தங்கினோம்.

[பாத யாத்திரை தொடரும்]

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s