காப்டனைக் கேளுங்கள்! – 1


ஆங்கில மூலம்ஜான் காக்ஸ், யு.எஸ். டுடேதமிழாக்கம்ஒரு அரிசோனன்

குறிப்பு: ஜான் காக்ஸ் யு.எஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற விமான ஓட்டுநர்.  ஸேஃப்டி ஆபரேடிங் ஸிஸ்டம்ஸ் என்ற பரிந்துரைக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார்.  அவர் யு.எஸ்.ஏ டுடே ஆங்கில நாளிதழில் அவ்வப்போது விமானங்களைப்பற்றியும், விமானப் பயணத்தைப்பற்றியும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்துவருகிறார்.  மிகவும் பயனுள்ள விஷயங்களைக் கொண்ட கேள்வி-பதில் தொகுப்பு இது.

விமானங்கள் பறக்கும் உயரம்

ask captain 1

நன்றி:  கெட்டி இமேஜஸ்

கேள்வி:  விமானங்கள் அதிகபட்சம் எவ்வளவு உயரத்தில் பறக்கமுடியும்?

— சுரசந்த்புர், மணிப்பூர்

பதில்: பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானங்களில் மிக அதிக உயர்த்தில் பறக்கவல்லது கன்கார்ட்.  அது 60,000 அடி [18300 மீட்டர்] உயரம்வரை பறக்கும்.

இராணுவ விமானங்களைப் பொறுத்தவரை SR-71 விமானம் 90,000 அடி [27400 மீ] உயரம் செல்லும்.

SR-71 தற்போதைய பயணி விமானங்கள் அதிகபட்சம் 45,000 அடிகளும் [13700 மீ],  கார்ப்பொரேட் விமானங்கள் 51,000 அடிகள்[15540 மீ]உயரமும் பறக்கின்றன.

கே:  எவ்வளவு உயர்த்தில் ஒரு வானூர்தியின் இறக்கைகள் பயனற்றுப்போகின்றன?

— கெவின் டி.

ப:  அது இறக்கைகளைப் பொறுத்தும், அவற்றின்மீது எவ்வளவு காற்று செல்லவைக்கப்படுகிறது என்பதையும் சார்ந்திருக்கிறது.  SR-71 விமானம் சிறப்பான இறக்கைகளுள்ளபடியால் சாதாரணமாக எண்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கிறது.  ஸ்பேஸ் ஷட்டில் கீழிறங்கும்போது லட்சம் அடி [30500 மீ] உயரத்திலேயே உபயோகப்படுத்தக்கூடிய அளவு காற்றை எதிர்கொள்கிறது.  மேலும், அது தனிப்பட்ட இறக்கைகளையும், வடிவமைப்பையும் கொண்டது.

ஒரு விமானம் லட்சம் அடி உயர்த்திற்கும்மேல் சென்றால் அதற்கு என்ன ஆகும்?

— பாப், ஜார்ஜியா மாநிலம், யு.எஸ்.ஏ

எப்படிப்பட்ட பயணிகள் விமானமோ, கார்ப்பொரேட் விமானமோ லட்சம் அடிகளுக்குமேல் தற்பொழுது பறப்பதில்லை.  ராக்கெட்டுகளால் இயக்கப்படும் வானூர்திகள் லட்சம் அடிகளுக்குமேல் பறந்து தரவுகள் [விவரங்கள்] சேகரிக்கின்றன. அவை இதற்கென்றே வடிவமைக்கப்பட்டவை.

விதிக்கப்பட்ட உச்சவரம்புக்கு மேற்பட்ட உயரத்தை வானூர்திகளால் நிலைநிறுத்த இயலுமா?

— ஸ்டெல்த், கனடா

சான்றிதழ் வழங்கச் சோதனை செய்யும்போது, வானூர்திகள் விதித்த உச்சவரம்புக்குமேல் பறக்கும்.  ஆயினும் அவற்றின் செயல்பாடு குறைவாகவேயிருக்கும். பொதுவாகச் சொன்னால், எடையையும் வெப்பத்தையும் பொறுத்து விதிக்கப்பட்ட உச்சவரம்பிற்குமேல் அவை பறக்கக்கூடும், ஆனால் அதற்குமேல் அதிகமாகப் பறக்கவியலாது.

கே:  எவ்வளவு உயரத்தில் பயணிகள் வானூர்தியால் பறக்கமுடியும்?  உலகில் எந்தெந்த விண்வழிகளில் இவை அதிக உயரத்தில் பறக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது?\

–சி.டி.ஒய்., எமரிவில், கலிஃபோர்னியா

ப:  பயணிகள் விமானம் 45,000 அடி [13700 மீ] உயர உச்சவரம்பில்தான் பறக்க அனுமதியுண்டு.  பொதுவாக அவை அனுமதியளிக்கப்பட்ட உச்சவரம்பு உயரத்தில் பறப்பதைக் காணலாம்.

கே:  போயிங் 767 விமானத்தின் உள்ளே இருக்கும் காற்று அழுத்தம் எத்தனை அடி உயரத்தில் காணப்படுவதாக இருக்கும்?

— காரி, ஹோனலுலு

ப:  போயிங் 767 அது அனுமதிக்கப்பட்ட 42000 அடி [12800 மீ] உச்ச உயரத்தில் பறக்கும்போது எட்டாயிரம் அடி [2400மீ] உயரத்திலிருக்கும் காற்று அழுத்தம் நிலைநிறுத்தப்படுகிறது.

கே:  போயிங் 767 எனக்கு மிகவும் பிடித்த விமானம்.  அது ஏன் இப்பொழுது உற்பத்திசெய்யப்படுவதில்லை?

— பஸ், டெல்ரே பீச், ஃபுளோரிடா

ப: போயிங் 767 பறப்பதற்கு அதிகமான எரிபொருள் தேவைப்படுகிறது.  தற்கால விமானங்கள் குறைந்த எரிபொருளை உபயோகிக்கின்றன.  எரிபொருள் அதிகமானாலும்,767ன் செயல்திறன் ஒப்பீடற்ற ஒன்று.

கே:  ஹெலிகாப்டர்கள் அதிகபட்சம் பறக்கும் உயரம் என்ன?

— பீட், வாஷிங்டன்

ப:  ஹெலிகாப்டர்களின் மாடல்களுக்குத் தகுந்தவாறு அவற்றின் அதிகபட்ச பறக்கும் உயரத்தை அதன் தயாரிப்பாளர்கள் கொடுக்கிறார்கள்.

மூக்கு மேல்நோக்கியா, கீழ்நோக்கியா?

ask captain 2கே: தரையிறங்க வரும்போது சில விமானங்களின் மூக்கு கீழ் நோக்கியும், சில மேல் நோக்கியும் காணப்படுகின்றவே, இது வெறும் தோற்றம்தானா, அல்லது உண்மையா? உண்மையென்றால், ஏனிந்த வேறுபாடு?

 – ஹெர்ப் ப்ரோகெர்ட், ஹோலிஸ்டன், மஸாசுஸெட்ஸ்

ப:  நல்ல கேள்வி.

விமானங்களில் ஒருவகையில் இறக்கைகளின் முன்பு அசையக்கூடிய சட்டங்கள் [leading slats] பொறுத்தப்பட்டிருக்கும்.  இப்படிப்பட்ட அமைப்புள்ளவற்றின் மூக்கு தரையிறங்கும்போது மேல்நோக்கியிருக்கும்.  இல்லாவிடில் மூக்கு கீழ்நோக்கியிருக்கும். போயிங் 737 முதலானவை முதல்வகை.  பொம்பார்டியர் CRJ-200 போன்றவை இரண்டாம்வகை. ஆயினும், தற்பொழுதைய பொம்பார்டியர் வானூர்திகள் முதல்வகையாவே தயாரிக்கப்படுகின்றன.

கே:  தரையிறங்க வரும்போது எரிபொருள் விகிதம் 70%ஆகவும், மூக்கு மேல்நோக்கியும் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  விமானம் மேலேறும்போதும், மூக்கு மேல்நோக்கியே உள்ளது.  அப்படியானால் விமானம் எப்படிக் கீழிறங்குகிறது?

– பீட், சியாட்டில்

ப:  சரியான இறங்கும் அளவைக் கொடுப்பதற்காக முன்னாலிருக்கும் அசையும் சட்டங்களுள்ள ஜெட் விமானங்களின் மூக்கு தொடுவானத்திற்குச் சிறிது மேலாகவும், அதன் சக்தி [எரிபொருள் செலுத்தப்படும் அளவும்] அதற்குத் தகுந்தவாறே இருக்கும்.  அசையும் சட்டங்களும், இறக்கையின்பின்னால் நீட்டப்படும் சட்டங்களும் [flaps] முழுவதும் நீட்டப்படும்போது, சக்தி அதிகமாக வைக்கப்படாதவரை, மூக்கு மேல்நோக்கியிருப்பினும், விமானம் ஏறாது.

சுருக்கமாகச் சொன்னால், விமானத்தின் எடை மேலுந்து திறனைவிடக் [lift] குறைவாக இருந்தால் விமானம் கீழிறங்கத் துவங்கும்.

கே:  ஸான் டியாகோவுக்குச் செல்லவேண்டிய எனது விமானம் பாம் ஸ்பிர்ங்கஸுக்குத் திருப்பியனுப்பப்பட்டது.  தரையிறங்கும்போது விமானத்தின் மூக்கு கீழ்நோக்கியிருந்ததோடு மட்டுமல்லாமல் மிகவேகமாக இறங்குதளத்தை [ரன்வே]நோக்கிப்பறந்தது.  நான் பலமுறை விமானப்பயணம் செய்திருக்கிறேன்.  அதுவரை எந்த விமானமும் அவ்வளவு வேகமாகத் தரையிறங்கியதில்லை.  விமானத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டதோ என்ற பயம் எனக்கு ஏற்பட்டது.  என்ன நடந்திருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

— பாம், ஸான் டியாகோ

ப:   கிளம்பும்போதே எரிபொருள் தேவையை மிகவும் கவனமாகக் கணக்கிட்டுவிடுவார்கள்.  தேவைப்பட்டால் மற்ற விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பவேண்டிய, மேலும் அதிகப்படியான் காப்பு எரிபொருளும் இதில் அடங்கும்.  எனவே, நீங்கள் நினைத்தாற்போல எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.

உங்கள் விஷயத்தை எடுத்துக்கொண்டால், விமானம் திட்டமிட்ட இறங்கும் வழிக்கு மேலே இருந்ததால், தரையிறக்க விமானிகள் சிறிது திருத்தம்செய்திருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.

(தொடர்ந்து பறப்போம்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s