அறுபடைவீடு பாதயாத்திரை – 8


முனைவர் நா.கி. காளைராஜன்

துன்முகி சித்திரை – 30 (13.05.2016) வெள்ளிக் கிழமை

காலை  திருவையாறு மடத்தில் இருந்து புறப்பட்டு 26 கி.மீ. நடந்து  சுவாமிமலை நகர விடுதியை அடைந்து அங்கு தங்கினோம்.

Displaying 20160513_174249.jpgசுவாமிமலை கோயிலுக்குச் சென்று அருள்மிகு சாமிநாதசாமியையும், மீனாட்சி சுந்தரேசுவரரையும் வழிபட்டோம். M.C.C அறக்கட்டளை விடுதி மேலாளர் சுவாமி தரிசன ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்கள்.   கொத்தமங்கலம் திரு. வயிரவன் அவர்கள் அன்னதானத்திற்கு நிதியுதவி அளித்தார்கள்.

அருணகிரிநாதர் அருளிச் செய்த “திரு எழுகூற்றிருக்கை“ தேர் வடிவில் அமைந்த சித்திர கவி படித்து மகிழ்ந்தோம்.

துன்முகி வைகாசி – 1 (14.05.2016) சனிக் கிழமை

Displaying IMG_20160514_072700.jpgஇன்று சுவாமிமலையில் ஓய்வு நாள். யாத்திரிகர் பலர் அருகில் உள்ள திருத்தலமான திருவலஞ்சுழிக்கு நடந்து சென்று அருள்மிகு வெள்ளை விநாயகர், பெரியநாயகி உடனாய சடைமுடிநாதர் வழிபாடு செய்து வந்தனர்.

திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர் பிரளய காலத்தில் ஏற்பட்ட பெறுங்கடநீரினால் உண்டான கடல்நுரையால் ஆனவர்.  எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. யாரும் தொடாமல் தீண்டாத்திருமேனியாகப் பாதுகாத்து வழிபாடு செய்து வருகின்றனர்.  விநாயகர் சந்நிதியில் உள்ள சிற்பத் தூண்களும் சிற்ப நுணுக்கம் மிகுந்த அடைவுகளும் உலகச் சிறப்பு வாய்ந்தன.

திருவலஞ்சுழி அருள்மிகு சடைமுடிநாதரை (ஸ்ரீ கபர்தீஸ்வரர்) வணங்கிக் கொண்டோம்.

“இலங்கை வேந்த னிருபது தோளிற
நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் பாரடியென்றலை மேலவே“

— அப்பர் சுவாமிகளின் தேவாரம் ஐந்தாம் திருமுறை 66.10

“வாதியாம் வினை மருமைக்கும் இண்மைக்கும் வருத்தம் வந்தடையாவே” என்பது திருஞானசம்பந்தன் வாக்கு. அப்பர் சுவாமிகள் திருத்தாண்டகத்தில் “வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளலாமே” என்கிறார்.

துர்வாச முனிவர் இத்தலத்தில் யாகம் செய்யும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்து எண்ணாயிரம் மகரிஷிகள் முதலானோர் யாகத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு இந்த ஆலயத்தில் தங்கி அவரவர்கள் தம் ஆன்மார்த்த பூசைக்காக சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டுள்ளனர் என்று தலபுராணம் கூறுகிறது.  இந்த ஆலயத்தில் காணப்படும் ஏராளமான சிவலிங்கங்கள்  இத்தலபுராணத்தை வலுப்படுத்துவதுபோன்று அமைந்துள்ளன.

ராஜராஜசோழனால் வழிபடப்பட்ட மகாகாளி அருள்மிகு அஷ்டபுஜ மகாகாளியம்மன் சந்நிதி இங்குள்ளது.  இராசராசன் போருக்குச் செல்லும் முன் இந்தக் காளியை வணங்கிச் சென்று வெற்றிகளைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது.

திருவலஞ்சுழியில் கோயில் முழுவதும் கட்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன.

மாலை  அனைவரும் கிரிவலம்வந்து மலையேறி அருள்மிகு சுவாமிநாதசுவாமியை வழிபட்டோம்.  இங்கு தமிழ்வருடங்களின் 60 பெயர்களையும் படிக்கட்டுகளுக்கு வைத்துள்ளனர்.

சுவாமிமலைக் கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்துள்ளது. புனர்நிர்மாணத் திருப்பணிகள் செய்து கட்டியுள்ளனர். திருப்பணி செய்தோர் பற்றிய தகவல்கள் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. கோயிலில் மிகவும் பழைமையான சிற்பங்கள் ஆங்காங்கே சிறுசிறு துண்டுகளாகக் காணப்படுகின்றன.

மீனாட்சிசுந்தரேசுவரரைப் பிரமன் பூசித்ததைக் காட்டும் மிகவும் பழைமையான சிற்பம் ஒன்று கோயிலின் மேற்கு மதிலில் உள்ளது.

துன்முகி வைகாசி – 2 (15.05.2016) ஞாயிற்றுக் கிழமை

சுவாமிமலை விடுதியில் இருந்து புறப்பட்டு 28 கி.மீ. நடந்து திருவாலங்காட்டை அடைந்து கணேஷ் திருமண மண்டபத்தில் தங்கினோம்.

வரும்வழியில் சாலையோரம்  சீத்தாராமர் கோயில் இருந்ததைக் கண்டு நின்றோம். கோயில் வாயிலில் யாத்திரிகர்கள் நிற்பதைக் கண்ட அந்த வீட்டினர் எங்களை வரவேற்று, கோயிற்கதவைத் திறந்து அங்கே தங்கச்சொல்லித் தண்ணீர்கொடுத்து உபசரித்தனர். சீத்தாராமரை வணங்கியாத்திரையைத் தொடர்ந்தோம்.

Displaying 20160515_071158.jpg

விட்டல் ருக்மிணி சமஸ்தான ஆலயம்

வழியில் விட்டல் ருக்மணி சமஸ்தானம் கோயிலைக் கண்டு வணங்கிவிட்டுச் சென்றோம்.

அதற்கடுத்து காஞ்சி காமகோடி 59ஆவது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சரசுவதி சுவாமிகள் அதிட்டானம் இருந்தது.  குருமகா சந்நிதானத்தை நினைந்து வணங்கிக் கொண்டோம். அடுத்து திருவாவடுதுறை ஆதீனம் இருந்தது.  குருமகா சந்நிதானம் அவர்களை நினைந்து வணங்கிக் கொண்டோம்.

 

யாத்திரிகர்களில் சிலர் திருவாலங்காட்டில் அருள்மிகு வண்டார்குழலி உடனாய வடவாராண்யேசுவரர் திருக்கோயிலுக்குச் சென்று வ்ணங்கி வந்தனர். மிகவும் பழைமையான கோயில்.  திருவாவடுதுறை ஆதீன அருளாட்சியில் இயங்கி வருகின்றது. இத்திருக்கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் உருவச்சிலை இதுவரை நமக்கு கிடைத்துள்ள உருவச்சிலைகளின் வரிசையில் கலைச் சிறப்பால் முதன்மையாக கருதப்படுகிறது.

கோயிலில் கல்வெட்டுகள் நிறைந்திருந்தன.

திருவாலங்காட்டில் இருந்து  5 கி.மீ. தொலைவிலுள்ள குத்தாலத்தில் பெரியகோயில் அருகிலிருக்கும் லலிதா கல்யாண மண்டபத்தில் தங்கினோம்.

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குத்தாலம் அருள்மிகு அரும்பன்னவனமுலை அம்மை  (அமிர்த முகிழாம்பிகை, ஸ்ரீபரிமளசுகந்த நாயகி) உடனாய உக்தவேதீஸ்வர சுவாமி (சொன்னவாறு அறிவார்) கோயிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டோம்.

இந்த மண்டபத்தை காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் அவரது நண்பர் திரு. திருநாவுக்கரவு மைத்துனர் திரு. கரிகாலன் அவர்கள் மூலம் ஏற்பாடுசெய்து கொடுத்தார்கள்.

துன்முகி வைகாசி – 3 (16.05.2016) திங்கள் கிழமை

Displaying 20160516_175040.jpgகுத்தாலத்தில் இருந்து புறப்பட்டு 26 கி.மீ. பயணித்து வைத்தீஸ்வரன்கோயில் சென்று குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ஏற்பாடு செய்த PL.A.  மண்டபத்தில் தங்கினோம்.

மண்டபத்தை வந்தடைந்த சிறிது நேரத்தில் தொடங்கிய மிகவும் பலத்த மழை  விடாது முழுநாளும் பெய்தது. சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

அனைவரும் மாலை  வைத்தீஸ்வரன் கோயில் சென்று அருள்மிகு தையல்நாயகி உடனாய வைத்தியநாதர் மற்றும் முத்துக்குமாரசாமி, அங்காரகன், தன்வந்திரி, பிள்ளையார் வழிபாடு செய்தோம்.

இங்குள்ள தீர்த்தம் மிகவும் பிரசித்தம்.  தவளை மீன் ஏதும் இதில் இருக்காது. இந்தத் தீர்த்தத்தில் உள்ள மண்ணை எடுத்துச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி உடற்பிணிக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர்.

துன்முகி வைகாசி – 4 (17.05.2016) செவ்வாய்க் கிழமை

வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து புறப்பட்டு 26 கி.மீ. தொலைவிலுள்ள சிதம்பரம் நோக்கிப் பயணித்தோம்.

புறப்படும்போது சிறிது தூரல் விழுந்து கொண்டு இருந்தது. சீர்காழி ஊருக்குள் செல்லாமல் சுற்றுச்சாலை வழியாகச் சிதம்பரம் சென்றோம்.  சீர்காழி சுற்றுச் சாலையில் செல்லும் போது பலத்த காற்றுடன் பெருமழை பெய்யத் துவங்கியது.

மழைக்காகக் குடையை விரித்தால் குடையைக் காற்று தூக்கியது. காற்றுக்காகக் குடையை மடக்கினால் மழை நனைத்தது. இதனால் குடையை முழுவதுமாக விரிக்காமலும் முழுவதுமாகச் சுருக்காமலும், சிறிதுவிரித்த குடையால் தலையைமட்டும் மூடிக்கொண்டு நடந்தோம்.

எங்கும் கும்மிருட்டு.  ஒரு கையில் குடையைப் பிடித்துக் கொண்டு இருந்த காரணத்தினால் மறுகையில் பிரம்பையும் டார்ச்லைட்டையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு நடப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

மேலும் சாலை எங்கும் மழைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மிதியடி அடிக்கடி சாலையோரத்தில் சேற்றில் பதிந்துகொண்டன.  பல நேரங்களில் மழைநீரில் வழுக்கின.

ஒருவழியாக மழையும் நின்றது.

“வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப்
பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து
முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி கீண்டு ஊழி
எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர் சேர்ந்தார்.“

— திருவிளையாடற் புராணப் பாடல்

சிதம்பரத்தில் தங்குவதற்கான காவேரி திருமண மண்டபத்தை காசிஸ்ரீ சின்னக்கருப்பன் செட்டியார் அவர்களின் மகன் திரு. பழனியப்பன் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.  மண்டப உரிமையாளர் உயர்திரு விஜி வாண்டையார் அவர்கள் அவரது குடும்பத்தினருடன் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

kaliஅனைவரும் தில்லை நடராசர் கோயிலுக்குச் சென்று  சுவாமி தரிசனம்செய்துவிட்டுத் திரும்பினோம்.

துன்முகி வைகாசி – 5 (18.05.2016) புதன் கிழமை

27 கி.மீ. நடந்து ஆணையாம்பேட்டையில் இருக்கும் “டான் பாஸ்க்கோ“ பள்ளியில் தங்கினோம்.  பள்ளி விடுமுறையான் காரணத்தினால் வகுப்பறைகளை யாத்திரிகர்களுக்கு ஒதுக்கீடுசெய்து கொடுத்தனர்.

இந்த இடத்தை காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களின் சகலை திரு. நாச்சியப்பன் அவர்கள் சிதம்பரம் திரு,நாராயணன் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தும் குடிநீர் வழங்கியும் உதவினார்கள்.

செல்லும் வழியில் வயல்களிடையே மணற் திட்டுக்களைக் காண முடிந்தது.

துன்முகி வைகாசி – 6 (18.05.2016) புதன் கிழமை

ஆணையாம்பேட்டையில் இருந்து புறப்பட்டு 20 கி.மீ. நடந்து கடலூரில் இருக்கும் தேவகோட்டையைச் சேர்ந்த உயர்திரு. முத்தையா அவர்களின் இல்லத்தில் தங்கினோம்.  இவர், கடலூரின் ஊர் எல்லையில் காத்திருந்து யாத்திரிகர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்று அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

[பாதயாத்திரை தொடரும்]

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s