அறுபடைவீடு பாதயாத்திரை – 7


முனைவர் நா.கி. காளைராஜன்

துன்முகி சித்திரை – 24 (07 மே, 2016) சனிக் கிழமை

அய்யலூரில் இருந்து புறப்பட்டு 25 கி.மீ. பயணித்து  ஆலத்தூர்கேட் வந்து காவல் ஆய்வாளர் ஒருவர் வீட்டில் தங்கினோம்.  காசிஸ்ரீ அங்கமுத்து சாமி அவர்களின் நண்பர் ஆவிக்காரப்பட்டி திரு. அருண் அவர்கள் இந்த இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
வழியில் அன்பர் ஒருவர் குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்று விபூதி பிரசாதம் வாங்கிக் கொண்டார்.  அருள்நிறைந்தோர் கட்டிய கோயில்கள் பல பொருள் நிறைந்தோர் வேகமாகச் செல்ல வேண்டி இடித்துத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மனம் வருந்தினேன்.

மாலை  ஆலத்தூர் கேட்டிலிருந்து மணப்பாறையிலிருக்கும் மெட்ராஸ் மெடிக்கல்ஸ் கடையை அடைந்தோம்.  அங்கு மணப்ரை நகரத்தார்கள் வந்து பச்சைக்காவடி சாமியை வரவேற்றார்கள்.   பின் யாத்திரிகர் அனைவரும் மணப்பாரை நகர விடுதியை அடைந்து அங்கு தங்கினோம்.
நகரவிடுதியினர் யாத்திரிகர் அனைவரையும் அன்புடன் துண்டு போர்த்தி மரியாதை செய்து வரவேற்றுத் தங்க வைத்து உணவு அளித்து உபசரித்தனர்.
சிவன்கோயிலுக்கு அருகிலேயே நகரவிடுதி இருந்த்து.  யாத்திரிகர் சிலர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தனர்.

துன்முகி சித்திரை – 25  (08 மே, 2016)  ஞாயிற்றுக் கிழமை

மணப்பாறையில் இருந்து புறப்பட்டு கரையாம்பட்டி பில்லூர் வழியாக 21 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீ மணிவேல் முருகன் கோயிலை அடைந்து, கோயில் மண்டபத்தில் தங்கினோம்.

பகல் முழுவதும் கடுமையான வெயில்.  இரவு பலத்த காற்றுடன் நல்ல மழை.

துன்முகி சித்திரை – 26 (09 மே, 2016) திங்கள் கிழமை

அருள்மிகு மணிவேல்முருகன் கோயிலில் இருந்து புறப்பட்டு 14 கி.மீ. தொலைவிலிருக்கும் சக்திநகரில் காசிஸ்ரீ அங்கமுத்துசாமி அவர்களின் நண்பர் உயர்திரு பெருமாள் இல்லத்தை அடைந்தோம்.  அங்கு அவர்கள் யாத்திரிகர்களுக்குப் பாதபூசை செய்து வரவேற்று வேட்டி துண்டுகள் போர்த்தி ரொட்டியும் தேநீரும் கொடுத்து உபசரித்தார்கள்.

பிறகு சக்திநகரிலிருந்து புறப்பட்டு 7 கி.மீ. நடந்து திருச்சிராப்பள்ளி டவுன்ஹாலில் இருக்கும் நகரவிடுதியில்  தங்கினோம்.

துன்முகி சித்திரை – 27 (10 மே, 2016) செவ்வாய்க் கிழமை

இன்று திருச்சிராப்பள்ளியில் ஒருநாள் ஓய்வு.

யாத்திரிகர்கள் பலரும் மலைக்கோட்டை மலைமேல் ஏறி அருள்மிகு தாயுமானவர் மற்றும் உச்சிப்பிள்ளையார் வழிபாடு செய்து கொண்டனர்.  மலைகோட்டை வாயில் அருகே மூலிகைக் கஞ்சி தர்மமாக வழங்கினர்.

கஞ்சி மிகவும் சூடாகவும் சுவையாகவும் இருந்தது. சாலையில் வருவோர் போவோர் எல்லோரையும் கூவி அழைத்து  அவர்கள் வேண்டியமட்டும் கஞ்சி கொடுத்தனர்.  இதுபோன்று திருப்பூவணத்திலும் ஸ்ரீபொன்னனையாள் அன்னதான அறக்கட்டளை சார்பாகச் செய்யவேண்டும் என வேண்டிக்கொண்டேன்.

மதியம் சில யாத்திரிகர்கள் அருகில் உள்ள அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிட்டு வந்தனர்.  அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அருங்காட்சியகம்.

இன்று நல்லமழை பெய்தது.  பூமி குளிர்ந்து, நீர்நிலைகள் நிறைந்தன.

துன்முகி சித்திரை – 28 (11.05.2016) புதன் கிழமை

இன்று காலை 02.45 மணிக்கு திருச்சிராப்பள்ளி நகரவிடுதியில் இருந்து புறப்பட்டு கல்லணை வழியாக நடந்து கணபதிநகர் கோயிலடியில் இருக்கும் அருள்மிகு வெட்டுடையாள்காளி கோயில் மண்டபத்தில் தங்கினோம்.

“கல்லிடை பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும், இயம்ப அரும் பொருள் ஈது என்னத்
தொல்லையில் ஒன்றே யாகி துறைதோறும் பரந்த சூழ்ச்சி
பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே“

கவிச்சக்கரவர்த்தி கம்பர்

அருள்மிகு ஸ்ரீவெட்டுடையாள் காளி கோயில் நிர்வாகியும் பூசாரியுமான ஸ்ரீசற்குரு கணபதி சுவாமிகள் யாத்திரிகர்களை வரவேற்று மகிழ்ந்தார்.

Related image25 கி.மீ. பயணம். அருள்மிகு ஸ்ரீவெட்டுடையாள் காளி கோயில் நிர்வாகியும் பூசாரியுமான ஸ்ரீசற்குரு கணபதி சுவாமிகள் யாத்திரிகர்களை வரவேற்று மகிழ்ந்தார்.  அருகில் இருந்த தண்ணீர் பம்புசெட்டில் அனைவரும் குளித்து மகிழ்ந்தனர்.

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலே 108 திவ்ய தலங்களில் ஒன்றான திருத்தலம் இருந்தது.  சென்று வழிபடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த இடம் மழைபெய்தால் யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியில்லாத காரணத்தினால் திருச்செனம்பூண்டி வழியாக 7 கி.மீ. நடத்து திருக்காட்டுப்பள்ளி புதுச்சத்திரத்தில் இருக்கும் அருள்மிகு முனீசுவரன் கோயில் மண்டபத்தை அடைந்து தங்கினோம்.  இந்த இடத்தை புதுச்சத்திரம் உயர்திரு.நாகராசன் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இரவு நல்ல மழை பெய்தது.

துன்முகி சித்திரை – 29 (12 மே, 2016) வியாழக் கிழமை

புதுச்சத்திரம் முனீசுவரர் கோயிலிலிருந்து புறப்பட்டு 19 கி.மீ. நடந்து  திருவையாற்றை அடைந்தோம்.

ஸ்ரீலஸ்ரீ தாம்பூலசித்தர் சீவசமாதியை வணங்கிக் கொண்டு, பேருந்துநிலையம் எதிரே உள்ள நடராசர் திருமண  மண்டபத்தை ஒட்டியுள்ள சி.நா.சத்திரம் – கருத்தான் செட்டியார் மடத்தில் தங்கினோம்.

இந்த மடத்தை மதுரையில் வசிக்கும் தேவகோட்டை உயர்திரு. பழ.சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

சி.நா .அன்னசத்திரமானது, திருவையாற்றில் ஆனந்த நடராசர் பூசையும் , வேதியர் சாதுக்களுக்கு அன்னதானம் நடத்துவதற்காகவும் நாட்டுக்கோட்டை நகரத்தார் – நேமம் கோயில் காரைக்குடி ‘கருத்தான் செட்டியார் வீடு‘ நா.நா.நா.க. குடும்பத்தாரால் 1870ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

Related image

பட நன்றி:  www.shivatemples.com

இன்று மாலை யாத்திரிகர்கள் அனைவரும் திருவையாறு கோயிலுக்குச் சென்றோம். அப்போது கோயிலின் மேற்குக் கோபுரத்திற்கு எதிரில் உள்ள தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணமாலை கல்லூரி உரிமையாளர்களுக்குச் சொந்தமான மேலமடத்திற்குச் சென்றோம்.  அங்கு மடத்தின் நிர்வாகி திரு. மாணிக்கவாசகம் செட்டியார் அவர்கள், குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு மாலை மரியாதை செய்தார்கள்.  யாத்திரிகர்கள் அனைவருக்கும் அந்த ஊரில் புகழ்பெற்று விளங்கும் அல்வா மிக்சர் வாங்கிக் கொடுத்து உபசரித்தனர்.

பின்னர் யாத்திரிகர்கள் அனைவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s