தேவிக்குகந்த நவராத்திரி -7


மீனாட்சி பாலகணேஷ்

பரமனும் பணிந்த பொற்பாதங்கள்

தேவியின் பாதகமலங்களை வர்ணிக்கும் மற்றுமொரு சௌந்தர்யலஹரி ஸ்லோகம்; (எண் 86). ஐயனுக்கும் அன்னைக்கும் இடையேயான ஒரு அந்தரங்க நிகழ்ச்சியை சுவைபட ஆதிசங்கர பகவத்பாதர் வர்ணித்துள்ளது மனதைக் கவரும்வண்ணம் அமைந்துள்ளது. நகைச்சுவை இழையோடும் இந்த ஸ்லோகம் எவ்வாறு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்க்கையை நடத்திச் செல்லவேண்டுமெனும் பொருளை அழகுற விவரிக்கின்றது.
சிவபிரானும் உமையவளும் உரையாடிக் கொண்டுள்ளனர். உமையவளின் பிறந்தவீட்டைப் பற்றி ஏளனமாகவும் விளையாட்டாகவும் எதையோ சிவபிரான் சொல்லப்போக, உமையன்னை உண்மையாகவே கோபம் கொண்டுவிட்டாள். அவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டும் விட்டாள். என்னசெய்தும் அவள் சினம் தணிந்தபாடில்லை. இப்போது உண்மையாகவே தவிப்பது சிவபிரான்தான்! எப்படி அவள் சினத்தைத் தணிப்பதென அறியாதவர், கடைசிமுயற்சியாக, “அன்புடையவளே! நான் செய்தது பிழைதான். சினம் தணிவாயாக!” என்றுஅவளுடைய மலர்ப்பாதங்களை வணங்குகிறாராம் (ஊடலில் இது சகஜம்!). அப்போது அவளுடைய பாதகமலங்களில் (சரணகமலே) சிவபிரானுடைய நெற்றி (லலாடே) படுகின்றபோதில், அவள் பாதங்களில் அணிந்துள்ள பாதசரங்களும் சிலம்பும், “கிணிகிணி,’ என (கிலிகிலிதம்) ஒலியெழுப்புகின்றன. இது எவ்வாறு உள்ளதாம்? இதில் தான் ஆதிசங்கரரின் கவிதைநயமும் வாக்குசாதுர்யமும் பூரணமாக வெளிப்படுகின்றன. ஒரு காலத்தில் சிவபிரான் சினம்கொண்டு தன்னைக் காதலில்விழவைக்க முயன்ற மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தாரல்லவா (தஹன-க்ருதம்)? (அவன் எரிந்தது இருக்கட்டும்- பின்பு அவனை உயிர்ப்பித்து அனங்கனாக்கினாள் அன்னை- உருவம் அற்றவன்-ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிபவன்) அவ்வாறு எரிக்கப்பட்டதற்காக, அவனது நெஞ்சில் சிவபிரானிடமான பகை பாணம்போல உறுத்திக்கொண்டிருந்தாம்! அப்பகையைத் தீர்த்துக்கொள்வதற்காக (ஈசான-ரிபுணா) இப்போது சிவனுடைய பகைவனாகிய மன்மதனால் எழுப்பப்பட்ட இந்தச் சிலம்பொலியானது, ‘ஜய, ஜய,’ எனும் வெற்றி முழக்கம்போலக் கேட்கின்றதாம்!

navarathiri-7
எத்தனை அழகான கற்பனை! மன்மதனின் பாணத்தால், இதே பார்வதியிடம் மயக்குற்றபோது, சினம்கொண்டு மன்மதனை எரித்தார். பின் அவள் கடுந்தவம் செய்ததும், அவளையே மணந்தும்கொண்டார். இப்போது அவளுடனான சிறுபிணக்கில், ஊடலில், அவள் கால்களில் விழுந்தும் பணிகிறார். இது மன்மதனுடைய தொழில்வெற்றிதானே? மன்மதனிடம் சிவபிரானின் தோல்விதானே?ஆகவே, அவளுடைய சிலம்பொலி மூலம் தனது வெற்றியை அவன் இவ்வாறு கொண்டாடிப் பழியையும் தீர்த்துக்கொள்கிறானாம்!
ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன-மத வைலக்ஷ்ய-நமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராதந்த: சல்யம் தஹனக்ருத-முன்மூலிதவதா
துலாகோடிக்வாணை: கிலிகிலித மீசான-ரிபுணா.
(ஸௌந்தர்யலஹரி-86)
இந்தப் பதுமைகளை உருவாக்கும்போது அன்னையின் திருமுகம் (ஆண்-பெண் முகங்கள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் அமைந்தவை, முன்னதாகவே தயார்நிலையில் கிடைக்கும் என்று கூறியிருந்தேன்) கோபத்தினால் சினந்த அம்பிகையின் முகமாக அமைந்தது தற்செயலாக அமைந்ததா இல்லையா என ஒரு அதிசயமான குழப்பம் ஏற்பட்டது! அற்புதமான தெய்வத்திருவிளையாட்டை, மிகச்சிறிதேயாயினும் பெரிதாக உணர்ந்த தருணங்கள் அவை!

(நவராத்திரி தொடரும்)

Advertisements

One thought on “தேவிக்குகந்த நவராத்திரி -7

  1. மறுமடந்தைய் மொழியநின்பத மலர்வெகுண்டரன் நுத்லிலோர், முறையறைந்திட விழியினும் படமுதுபழம் பகைகருதிவேள், இறையை வென்றனன் வெழியிவென்றனன் எனமுழங்கிய குரலெனா,அறைசிலம் பெழுமரவம் என்பதெ னருண்மங்கல லமலையே” வேள் மன்ம்னதன். இறைவன் தன் சிரசை அம்மையின் திருவடிகளில் வைத்து வணங்கினான். சிரசு திருவடிகளில் படிந்தபோது அவனது நெற்றிக் கண்ணும் அம்மையின் திருவடியில் படிந்தது. அதனால் மன்மதன் இறைவனையும் வென்றேன்; இறைவனின் கௌவியாக விளங்கி என்னை எரித்த விழியையும்வென்றேனென்று ஆர்ப்பரித்த குரலாக சிலம்பொலி எழுந்தது. என்ன அழகான கற்பனை. இல்லற இன்பம் இதிலல்லவோ அமையும்?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s