புண் தீர்க்கும் மருந்து!


முனைவர் நா.ரா.கி. காளைராஜன் 

http://wp.me/p4Uvka-up 

சர்க்கரை நோயாளிகளுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.​

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எங்களது வீட்டிற்கு எதிரே ஒரு சிறு காளிகோயில் கட்டிக் கொண்டிருந்தனர்.  சிமிண்ட்டினால் ஆன சுதை சிற்பங்களை ஒருவர் செய்து கொண்டிருந்தார்.  காலையும் மாலையும் அங்கே சென்று அவர் செய்யும் சிற்பங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு ஒரு வேலையாக இருந்தது. வலஞ்சுழிப் பிள்ளையார் தனித்திருப்பார், இடஞ்சுழிப் பிள்ளையார் இணைந்திருப்பார் என்றெல்லாம் பலவாறான கதைகளை என்னிடம் கூறிக் கொண்டே அவரது வேலையைப் பார்ப்பார்.  ஒருநாள் அவரது சுய வரலாற்றையும் என்னிடம் கூறினார்.

ங்கள் சொந்த ஊர் கோட்டையூர்,  தற்போது சென்னையில் இருக்கிறோம்.  நாங்கள் ஆசாரி.  சுதைச் சிற்பங்கள் செய்வது எனது தொழில்.  கோபுர வேலைகளுக்குப் பிற ஊர்களுக்குச் சென்றுவிட்டால், வேலை முடிந்து திரும்பப் பல மாதங்கள் ஆகும்.  அதுவரை சரியான சாப்பாடு இருக்காது.  நாமாகத்தான் சமைத்துச் சாப்பிட வேண்டும்.  சில நாட்களில் கடைகளில் சாப்பிடுவேன்.  பல நாட்களில் டீ காபி என்று சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருந்து விடுவேன்.

 இவ்வாறாகப் பல வருடங்கள் வாழ்ந்த எனக்குத் திடீரென கால்களில் நோவு தெரிந்தது.  மருத்துவரிடம் சென்று காட்டியபோது, காலுக்குள் ஆணி தைத்துத் சீழ் பிடித்துள்ளது. சர்க்கரை கூடுதலாக இருப்பதால், முதலில் சர்க்கரை அளவைக் குறைத்துக் கொண்டு காலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.  என் கையில் அவ்வளவாகக் காசு இல்லாத காரணத்தினால் அவர் கூறியது என் மண்டையில் ஏறவில்லை.  

காலில் ஏற்பட்ட புண் பெரிதாகிவிட்டது. யானைக்கால் போன்று வீங்கிவிட்டது. சீழ்பிடித்த இடத்தில் வலி தெரியும். தினமும் துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.  மருத்துவமனை செல்லவும், காத்திருக்கவும் சிரமப்பட்டு, நானே எனது காலைச் சுத்தம் செய்து கொள்வேன். ஒரு விரல் உள்ளே செல்லும் அளவிற்குக் காலில் ஓட்டை ஏற்பட்டு விட்டது. பலர் பலவாறாகக் கூறிய மாத்திரைகளை யெல்லாம் வாங்கிச் சாப்பிட்டும் ஒன்றும் குணமானபடியில்லை.  நகரவேதையில் தவித்தேன்.  

எனது பாவங்களைச் சுத்தம் செய்கிறோம் என்று கூறி என்னை மதம் மாற்றினர்.  ஆனாலும் எனது நோய் தீர்ந்தபாடில்லை, எனது வேதனையும் மாறியபாடில்லை.  நீ மருந்துகளை மாற்றியும், மதத்தை மாற்றியும் நோய் மாறவில்லையே என்று சிலர் கேலி செய்தனர்.  ஒருநாள் இரவு, மிகுந்த வேதனை, மரண வலி.  வீட்டிற்குள் தட்டுத்தடுமாறி உருண்டு கொண்டே இருந்தேன்.  நோய் வந்தபின்னர், வேலைக்குச் செல்லதில்லை, மருந்து மாத்திரைகள் மருத்துவர் என்று செலவுகள் கூடிவிட்டன.  கையிலிருந்த பணம் நகைநட்டு எல்லாம் எனது கால் வைத்தியத்திற்குக் கரைந்து போயின.

எதையாவது எடுத்து எனது புண்ணிற்கு மருந்தாக இட வேண்டுமென்ற நிலை.  வீடு முழுதுமுள்ள பாட்டில்களை யெல்லாம் தேடி எடுத்துப் பார்த்தேன்.  எதிலும் எந்த மருந்தும் இல்லை. ஒரு வேப்பஎண்ணைப் பாட்டில் மட்டும் எண்ணையுடன் என் கண்ணில்பட்டது.  

இது பத்து ஆண்டுகளுக்கு முன், எனது மகள் தலைப் பிரசவத்திற்கு எனது வீட்டிற்கு வந்தபோது, எனது தாயார் வாங்கி வந்தது.  சென்னையில் பிரசவத்திற்கு யாரும் வேப்ப எண்ணையைப் பயன்படுத்துவதே கிடையாது.  எல்லோருக்கும் மருத்துவமனைப் பிரசவம்தான்.  என் அம்மா, என் மகளுக்காக வாங்கி வந்த வேப்ப எண்ணைப் பாட்டில்.  திறந்து பார்த்தால் எண்ணையானது லேகியம் போன்று இருந்தது.  

எனது மரண வேதனையில் என் கையில் கிடைத்த எதையும் நான் விட்டுவிட மனம் இல்லை.  10 ஆண்டுகள் பாட்டிலில் உறைந்து போன வேப்பஎண்ணையை எடுத்து எனது புண்ணுக்கு மருந்தாகத் தடவினேன்.  புண்ணிலிருந்து சீழ் அகற்றப்பட்டதும், எண்ணையைத் தடவியதும் சற்று இதமாக இருந்தது.  தூங்கிவிட்டேன்.

காலையில் நேரம் கழித்தே முழிப்பு வந்தது.  எழுந்தேன்.  ஆனால், எப்போதும் நான் எழுந்து விட்டாலும், என் கால் எழுந்திரிக்காது.  ஆனால் இன்று அவ்வாறான உணர்ச்சி ஏதும் இல்லை.  கையில் காசு ஏதும் இல்லாத காரணத்தினால், என் கையிலிருந்து வேப்ப எண்ணையையே பயன்படுத்திப் புண்ணில் பூசிக் கொண்டேன்.  இரவுவரை ஏதும் பெரிதாக வலி தெரியவில்லை.  இவ்வாறாக ஐந்தாறு நாட்கள் ஆகிவிட்டன.  இப்போது புண் ஆறத் துவங்கியிருந்தது, எனது வேதனையும் குறைந்திருந்தது.  சரியாக ஒரு மாதத்தில் நான் பழையபடி ஆகிவிட்டேன்.  பாட்டிலில் இருந்த பழைய எண்ணையும் தீர்ந்து விட்டது. “  இப்போதெல்லாம் வேலைக்குச் செல்கிறேன்.  இதோ பாருங்கள் என் கால் சரியாகி விட்டது என்றார்.

எனக்கு மிகுந்த ஆச்ச்சரியமாக இருக்கிறது.  சர்க்கரை நோயாளியின் புண்ணிற்கு இப்படியொரு மருந்தா!

இப்படியெல்லாம் இருப்பதை விடுத்தா பெரும் பணம் செலவு செய்கின்றனர்?!  பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் எப்படி யிருப்போம் என்று நமக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும் இப்படியிருந்து விடக்கூடாது என்று எண்ணிக் கொண்டேன்.  அப்போதைக்கு இப்போதே செய்து வைப்போம் என்று நினைத்து நானும் இரண்டு பாட்டில்களில் வேப்பஎண்ணை வாங்கி வீட்டில் வைத்து விட்டேன்.

அறிவிப்புஇது கட்டுரை ஆசிரியருக்கு ஒருவர் சொன்ன அனுபவமே!  வேப்பெண்ணைக்கு புண்ணை ஆற்றும் குணம் இருக்கலாம்.  எதுவாக இருப்பினும், மருத்துவரிடம் காட்டிகொள்வதே சிறந்தது.  அதுவும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தானாக “வேப்பெண்ணை மருத்துவம் செய்து, குணம் கிட்டாவிட்டால், கட்டுரை ஆசிரியரோ, “தாரகை”யோ பொறுப்பல்ல என்பதை முன்கூட்டியே அறிவித்துக்கொள்கிறோம்.

***

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s