தமிழுக்கு விடுதலை தா .. !

தமிழுக்கு விடுதலை தா .. !

சி. ஜெயபாரதன், கனடா

Hands tied
 
          தமிழைச் சங்கச் சிறையில்

தள்ளாதே ! 

தங்கச் சிறை வேண்டாம் !

கை கால்களில்​ 

பொன் விலங்கு பூட்டாதே !​

மூச்சு விடட்டும்;

முன்னுக்கு வரட்டும் ! 

வேரூன்றிக் கிளைகள் விட்டு

விழுதுகள் 

வைய மெங்கும் பரவட்டும்

கழுத்தை நெரிக்காதே !

காற்றில் நீந்தட்டும் ! 

கால் பந்தாய் எற்றாதே !

தமிழைத் தவழ விடு !

நடைத் தமிழில் 

நடக்க விடு !

நடக்க நடக்கக் குருதி ஓடும் ! 

முடக்காதே தமிழை ! 

தவறி விழுந்தால்

எழுந்து நடக்கக் கைகொடு ! 

தோள் கொடுதூக்கி விடு !

தனித்தமிழ் தேடிதூய தமிழ் நாடி

வடிகட்டி ஏந்தி

வலை உலகில் மேயாதே ! 

பழமை பேசிப் பேசி 

ஆறிய கஞ்சியை மீண்டும்

சூடாக்கிக் குடிக்காதே !

அழுக்குச் சட்டையைத்

தூய நீரில்

துவைத்து துவைத்துக் கிழிந்தது !

புத்தாடை அணிய விடு ! 

புத்துயிர் பெற்றுப் பைந்தமிழ்

இத்தரணி ஆளவிடு !

 +++++++++

Advertisements

2 thoughts on “தமிழுக்கு விடுதலை தா .. !

 1. ‘தனித்தமிழ் தேடி, தூய தமிழ் நாடி
  வடிகட்டி ஏந்தி
  வலை உலகில் மேயாதே !
  பழமை பேசிப் பேசி
  ஆறிய கஞ்சியை மீண்டும்
  சூடாக்கிக் குடிக்காதே !—–‘

  கவிதை ஆசிரியர் கூற வரும் கருத்து இன்னதென்று தெளிவாகப் புரியவில்லை. சங்கத் தமிழைப் பயில்வது வீண் என்கிறாரா? தற்காலத் தமிழை மட்டுமே ஆதரியுங்கள் என்கிறாரா? குழப்பமாக உள்ளது. சிறிது விளக்கினால் தெளியும்! நன்றி.

  Like

 2. தனித்தமிழ் தேடி, தூயதமிழ் நாடிக் காலத்தை வீணாக்காது இலக்கியம், விஞ்ஞானக் கட்டுரைகள் படைக்க வேண்டும்.

  சங்கத்தமிழ் நாகரீகம் பேசிக் கொண்டு பொழுதைக் கடத்தாது, நடைத்தமிழில் படைக்க வேண்டும்.

  https://jayabarathan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ [மூலக் கட்டுரை]

  சி. ஜெயபாரதன், கனடா

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s