வெற்றிலை மாலை

வெற்றிலை மாலை 

டாக்டர் ராஜாராம்

 அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே  ஒன்றைத் தாவி…
 
இந்த கம்பன் கவிதையை அறியாதார் யார்? பஞ்சபூதங்களும் இதில் மலர்கின்றன. கடைசிவரி — அவன் நம்மைஅளித்து காப்பான்.  அதாவது பக்குவப் படுத்திக் காப்பான். பிறவிப் பெருங் கடலிலிருந்து நம்மை அவன் காக்குமுன் அதற்குத் தகுதிபெற நாம் பக்குவப் படவேண்டியது அவசியம். அதையும் அவனே செய்வான்! இரண்டாவது வரியில் வரும் “ஆரியர்க்காக ஏகி “ —  “ஆர்யன்” என்றால் வடநாட்டான் என்று அர்த்தமல்ல! “ஆர்ய” என்று ஒருவரை நாம் அழைத்தால் ” பெருமதிப்பிற்கு உரியவரே” என்று பொருள் .
சீதை அப்படித்தான் ராமனை அழைத்தாள். “ஆருயிருக்காக ஏகி” என்றும் “ஆருயிர் காக்க ஏகி” என்றும் கூட எடுத்துக் கொள்வது  தமிழின் அழகு.  ஆருயிரான சீதையைக் காக்க ஏகி என்ற பொருள் அதில்  மலர்வது ரசிக்கத்தக்கது.
 
“ஐந்திலே ஒன்று பெற்றான் ”  என்பதில் வேறு ஒரு கருத்தும் மலர்கிறது.  1) அடையப் படவேண்டிய பரம் பொருள்  2) அடையும் நாம் 3)  அடையும் வழி 4) அடைதலுக்கு குறுக்கே வரும் தடங்கல்கள் 5) அடைவதால் நாம் பெறும் பயனாகிய சச்சிதானந்தம் .   இந்த ஐந்தும் ஒன்றுபெற்ற(ஒன்றாகிய)  பொருளாக நிற்பவன் அனுமன்!
அசோகவனத்தில் சோகமாக அமர்ந்திருந்த சீதைக்கு புத்துயிர் ஊட்டியவன் அனுமன் என்பதால், ஒரு உயிரைத் தரும் தாய்க்கு(அன்னைக்கு) சமானம் ஆனான்!  எனவே  தாயாக அவனைப்  பார்த்த சீதைக்கு ஏதாவது மங்களப் பொருளை அவனுக்குத்  தரவேண்டுமே என்று சுற்றுமுற்றும் நோக்கி அருகில் படர்ந்திருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து ஐந்து வெற்றிலைகளைப் பறித்து அவன் மேல் கண்ணீர் ததும்பப் போட்டாள்! வேறென்ன செய்வாள்? அந்த ஐந்து வெற்றிலைகளை மாலையாகப் போட்டுக்கொண்டான் அனுமன். அவனுக்கு அது மிக்க மகிழ்வு தந்தது ஆதலால் நாமும் அவனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கிறோம்.  வெற்றி  தருவது வெற்றிலை!  வெற்றி இல்லை எனாதது வெற்றிலை! 
வெண்ணையும், துளசி மாலையும் அவனுக்கு ஏற்றது.  நமது வினைப் பயன்கள் (கர்மா) என்பதின் திரட்டே வெண்ணை. அதை கோகுலத்தில் கண்ணனுக்கு எட்டாத உயரத்தில் அறியாமையால் வைத்தாலும்  தனிப் பெருங் கருணையால் அதைத் திருடியாவது அவற்றால் நாம் அழியாமல் காத்தருளியவன் கண்ணன். அந்த மனோ பாவனை அனுமனுக்கும் பொருந்தும். ஒரே வித்தியாசம். அனுமன் “வெண்ணையை” திருடவில்லை. நாமே அதை அளித்து விடுவதால் அதைவாங்கி நம்மைக் காப்பவன் அனுமன். அதே வெண்ணையை புனிதமாக்கி நைவேத்ய பிரசாதமாக நாம் உண்ணுகையில் நாம் பேறு பெறுகிறோம். “துளசி அம்ருத நாமாஸி “– அமிர்தத்துக்கு ஒப்பானது துளசி. அமிர்தம் அமரத்துவம். அனுமனும் அமரன். சிரஞ்சீவி. என்ன பொருத்தம்!  அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. உலகில் வாழும் அடியார்களுக்கும் கிடைக்கவேண்டாமா? அந்தப் பெரும் கருணையால் அன்னை மகாலக்ஷ்மியே துளசிச் செடியாக (திருத்துழாய்) புவியில் அவதரித்தாள்.  அவளே சீதை!
அவள் அனுமனைத் தனது குழந்தையாகவும் கண்டதால் துளசி உருவில் அவன் மார்பில்  தொடுவதாகவும் கொள்ளலாம். அதனால் அனுமன் பரவசமாகிறான்.
வடை என்பது முழு(பூரணமான)  வட்டம்.   பிள்ளையார்க்கு உரிய  ” உ’ என்ற சுழி இப்பிரபஞ்ச சுழற்சியை நினைவூட்டுகிறது. அதுபோல  வடையின் நடுவே உள்ள வெற்றிடமும், வடையின் பூர்ண வட்டமும் நமக்கு ஆன்மீக உணர்வைத தூண்டுகிறது.  
**************
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s