மல்லல் மூதூர் மதுரை – 1

மறுபகிர்வு:  நன்றி:  மின்தமிழ்:

முனைவர் ப. பாண்டியராஜா

வரலாற்றில் மதுரை

 செங்கடலை அடுத்த பயணம் (Periplus of the Erythraean Sea)

– The Voyage around the Erythraean Sea – AD 40 – 50)

 அ. Periplus என்றால் என்ன?

பெரிப்லூஸ் என்பது ஒரு கிரேக்கச் சொல் (Περίπλους). இதற்குக் கடலில் சுற்றிவருதல் (sailing around) என்று பொருள். ஆகுபெயராக அப்படிப்பட்ட ஒரு பயணத்தையும் குறிக்கும் (a voyage or a trip around something – as an island or a coast). பலதரப்பட்ட பெரிப்லூஸ்கள் எழுதப்பட்டுள்ளன. இது எரித்ரியன் கடலைச் சுற்றிய பயணம். கிரேக்க மொழியில் எரித்ரா (Erythra) என்றால் சிவப்பு என்று பொருள். எனவே எரித்ரீயன் கடல் என்பது செங்கடல் (Redsea). இருப்பினும் செங்கடலை அடுத்துள்ள பாரசீக வளைகுடா (Persian Gulf), அதனை அடுத்துள்ள அரபிக்கடல் ஆகிய பகுதிகளையும் இது குறிக்கும். எனவே செங்கடல், கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை, இந்தியாவின் மேற்குக்கரைப் பகுதி ஆகியவற்றில் கடற்பயணமாகச் சுற்றிவருவதே Periplus of the Erythraean Sea ஆகும்.  இவ்வாறு சுற்றி வந்த கடற்பயணத்து அனுபவங்கள், கண்ட இடங்கள், அங்கிருந்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் நேரடிக் கூற்றே இந்நூல் ஆகும்.

இந் நூலை எழுதியவர் இன்னார் எனத் தெரியவில்லை. எழுதப்பட்ட காலமும் சரிவரத் தெரியவில்லை. இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளையும், அதில் இடம்பெறும் அரசர் ஆகியோர் பெயர்களையும் வைத்து இது கி.பி. 40–50 ஆக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதை எழுதியவர் எகிப்தில் வசித்துவந்த இரு கிரேக்கராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந் நூல் கிரேக்க மொழியில் Περίπλους τῆς Ἐρυθράς Θαλάσσης என்றும், லத்தீன் மொழியில் Periplus Maris Erythraei என்றும் அழைக்கப்படுகிறது.

 ஆ. Periplus of the Erythraean Sea கூறுவது என்ன?

greek shipஇந் நூல் 66 பத்திகளை (Paragraph)க் கொண்டது. ஒவ்வொரு பத்தியும் 5 முதல் பத்து வரிகளைக் கொண்டது. மொத்தத்தில் 4 பக்கங்களுக்குள் அடங்கிவிடும் இந் நூல் அக் காலத்திய வணிகத்தைப் பற்றியும், நாடுகளைப் பற்றியும், மக்களைப் பற்றியும் முக்கியமான பல செய்திகள் அடங்கிய ஒரு தகவல் சுரங்கம் ஆகும்.

இதில் முதல் 18 பத்திகள் வடக்கு – தெற்கு திசையில் எகிப்திலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை வழியாக இன்றைய டான்ஜானியா (Tanzania) வரையிலான துறைமுகப்பட்டினங்களையும், கடல்வழிகளையும் விவரிக்கின்றன. அடுத்து வரும் 42 பத்திகள் (19 முதல் 60 வரை) மேற்கு – கிழக்கு திசையில் பாரசீக வளைகுடாவை ஒட்டி, எகிப்திலிருந்து இந்தியாவின் மேற்குக் கடற்கடற்கரை வரையிலான பகுதியை விவரிக்கின்றன. கடைசி ஆறு பத்திகள் இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் இலங்கையிலிருந்து, மசூலிப்பட்டினம் வழியாகக் கங்கைநதியின் முகத்துவாரம் வரையிலான பகுதிகளை விவரிக்கின்றன. இதுவரை இந் நூலாசிரியர் தன் நேரடி அனுபவங்களாகவே கூறுகிறார். இதன் பின்னர் சீனம் வரையிலான பகுதிகள் பற்றித் தான் கேள்விப்பட்டவற்றை எழுதுகிறார்.

குறிப்பாக 53, 54, 55, 56 ஆகிய பத்திகள் தமிழ்நாட்டு மேற்குப் பக்கக் கடற்கரைப் பட்டினங்களான முசிறி, தொண்டி ஆகிய துறைமுகங்களைப் பற்றிக் கூறுகின்றன.

 இ. பெரிப்லூஸ் கூறும் தமிழகப் பகுதிகள்

முதலில் குஜராத்திலிருந்து முசிறி, தொண்டிவரை பயணிக்கும் பகுதி.

  1. Beyond Calliena there are other market-towns of this region; Semylla, Mandagora, Pala patma, Meligara, Byzantium, Togarum and Aurannohoas. Then there are the islands called Sesecrienae and that of the Aegidii, and that of the Caenitae, opposite the place called Chersonesus (and in these places there are pirates) and after this the White Island. Then come Naura and Tyndis, the first markets of Damirica [=Limyrike], and then Muziris and Nelcynda, which are now of leading importance. (available in internet: The Voyage around the Erythraean Sea –

https://depts.washington.edu/silkroad/texts/periplus/periplus.html

Aegidii – கோவா;

Naura – கண்ணனூர், கேரளா

Tyndis – (சங்க காலத்துத் தொண்டி) – பொன்னானி, கேரளா

Damirica – தமிழகம்

Muziris – (சங்க காலத்து முசிறி) – கொடுங்களூர் (Cranganur), கேரளா

Nelcynda – கோட்டயம் அருகில் (τὰ Νελκύνδα), கேரளா

தொண்டி, முசிறி பற்றி நம் சங்க இலக்கியங்கள் கூறுவதைப் பாருங்கள்.

தொண்டி (20)

திண் தேர் பொறையன் தொண்டி

தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே – நற் 8/9,10

கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல் – நற் 18/4

கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி

நெல் அரி தொழுவர் கூர் வாள்_உற்று என – நற் 195/5,6

திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை – குறு 128/2

பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி

முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு – குறு 210/2,3

தொண்டி அன்ன என் நலம் தந்து – குறு 238/4

தொண்டி அன்ன பணை தோள் – ஐங் 171/3

வண்டு இமிர் பனி துறை தொண்டி ஆங்கண் – ஐங் 172/2

அரவு உறு துயரம் எய்துப தொண்டி

தண் நறு நெய்தல் நாறும் – ஐங் 173/2,3

அணங்கு உடை பனி துறை தொண்டி அன்ன – ஐங் 174/1

தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே – ஐங் 175/4

பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டி

தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி – ஐங் 176/1,2

தொண்டி அன்னோள் தோள் உற்றோரே – ஐங் 177/4

குட்டுவன் தொண்டி அன்ன – ஐங் 178/3

இன் ஒலி தொண்டி அற்றே – ஐங் 179/3

துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே – ஐங் 180/4

வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே – அகம் 10/13

திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம் – அகம் 60/7

தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை – அகம் 290/13

கள் நாறும்மே கானல் அம் தொண்டி

அஃது எம் ஊரே அவன் எம் இறைவன் – புறம் 48/4,5

தொண்டியோர் (2)

வளை கடல் முழவின் தொண்டியோர் பொருந – பதி 88/21

தண் தொண்டியோர் அடு பொருந – புறம் 17/13

முசிறி (3)

முதுநீர் முன்துறை முசிறி முற்றி – அகம் 57/15

வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ – அகம் 149/11

முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன – புறம் 343/10

இவை அனைத்தும் வெறும் இலக்கியக் கூற்றுகள் இல்லை. இவற்றுக்கு வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன அல்லவா!

இப் பகுதியில் கோவாவிலிருந்து தெற்கில் பயணிக்கும்போது உள்ள துறைமுகங்களின் பெயர்களை மட்டும் பெரிப்லூஸ் குறிப்பிடுகிறது. அடுத்த பகுதியில் இவ்விடங்களின் இருப்பிடங்களைத் துல்லியமாகக் குறிப்பிடுகிறது. தமிழகம் என்ற பெயர் அக்காலத்திலேயே இருந்திருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு உச்சரித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? அன்றைக்கே இது லெமூரியா என்ற அழைக்கப்பட்டிருக்கிறதோ?

Damirica என்பதன் முதல் கிரேக்க எழுத்து  (Delta=D). இது தவறுதலாக கிரேக்க (Lambda=L)-வாகப் படிக்கப்பட்டிருக்கலாம், எனவேதான் இதனை Limyrike எனச் சிலர் படித்திருக்கலாம் எனச் சில ஆய்வாளர்கள் கூறுவர்.

Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same Kingdom, abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river, distant from Tyndis by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia. Nelcynda is distant from Muziris by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea.

There is another place at the mouth of this river, the village of Bacare; to which ships drop down on the outward voyage from Nelcynda, and anchor in the roadstead to take on their cargoes; because the river is full of shoals and the channels are not clear. The kings of both these market-towns live in the interior. And as a sign to those approaching these places from the sea there are serpents coming forth to meet you, black in color, but shorter, like snakes in the head, and with blood-red eyes.

Cerobothra – சேர புத்திரர் – C – என்பதை K – என்ற உச்சரிப்பில் படித்ததால்தான் இது கேரளம் ஆனதோ?

Nelcynda பற்றி அண்மையில் ஒரு புதிய செய்தி வெளிவந்துள்ளது. G. Mahadevan என்பவர் இந்து நாளிதளில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

THIRUVANANTHAPURAM: A team from the Department of Archaeology, University of Kerala, that undertook surface exploration studies in the Central Travancore region of Kerala claims to have stumbled upon what could well be Nelcynda, a trade emporium of ancient Kerala.

The 16-member team led by the Head of the Department, Ajit Kumar, found a piece of the handle of what was possibly a Roman amphora — a vessel used at the turn of the first millennium to carry wine and olive oil — from the Alumthuruthu-Kadapra area on the banks of the river Pampa. Pottery shards of local origin were also found during the exploration done in December 2007.

Now we have found evidence that points to the possibility that the ancient trade port of Nelcynda was located in what is today Alumthuruthu-Kadapra near Chengannur,” Dr. Ajit Kumar said.

http://www.thehindu.com/todays-paper/study-points-to-ancient-trade-connection-in-central-travancore/article1180832.ece

பாண்டியன் என்ற பெயரை இங்கே நாம் பார்க்கிறோம். அக் காலத்தில் மேற்குக் கரைத் தொண்டியும், முசிறியும் சேரர் வசம் இருந்திருக்கின்றன. ஆனால் அதற்குச் சற்றுத் தெற்கே கோட்டயம் பகுதியும், அதற்குத் தெற்கிலுள்ள கடற்கரைப் பகுதியும் பாண்டியர் வசம் இருந்திருக்கின்றன. அயல்நாட்டு ஏற்றுமதி, இறக்குமதிக்காக மேற்குக் கரையில் தமக்கு உரிமையுள்ள ஓரிடம் இருக்கவேண்டும் என்று பாண்டியர் அதைக் கொண்டிருந்திருக்கின்றனர் போலும்.

பெரிப்லூசில் மதுரையைப் பற்றிய தகவல்கள் இல்லையென்றாலும், பாண்டிய அரசைப் பற்றிய தகவல்களால் மதுரையின் தொன்மை இதன் மூலமும் தெரியவருகிறது.

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s