மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் — திருவிளையாடல் புராணம்

முனைவர் நா.ரா.கி. காளைராஜன்

மதுரையில் அருள்மிகு சோமசுந்தரேசுவரர் 64 திருவிளையாடல்களை நடத்தி மக்களை உய்வித்துள்ளார்.

இந்த 64 திருவிளையாடற் புராணங்களையும் வடநூலிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழிலில் பரஞ்சோதி முனிவர் பாடியுள்ளார்.

திருவிளையாடற் புராணத்தில் ஈசனது திருவிளையாடல்கள் மட்டும் இடம் பெறவில்லை.  அவற்றில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் வம்சாவழியே வரிசையாக இடம் பெற்றுள்ளன.

திருவிளையாடல் புராணக் கதைகளில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களின் வம்சாவழியும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

திருவிளையாடற் புராணத்தில் உள்ளபடி, பாண்டிய மன்னர்களின் பெயர்ப்பட்டியலைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

(படலம் 3)
குலசேகர பாண்டியன்:   மதுரை நகரை மீண்டும் புனர்நிர்மாணம் செய்த பாண்டிய மன்னன்.
(படலம் 4) 
மலையத்துவசன்:   பாண்டி மன்னன்
காஞ்சனமாலை: மலையத்துவசனின் மனைவி — அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் மாமியார்.  இவள் நீராடும்பொருட்டு சிவபெருமான் அழைத்ததனால் ஏழு கடல்களும் மதுரைக்கு வந்தன.
தடாதகை:  மலையத்துவனின் மகள் — அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் மனைவியான அன்னை மீனாட்சி.
சுந்தர பாண்டியன்:  அருள்மிகு சோமசுந்தரேசுவரர்
(படலம் 11)
உக்கிர குமாரன்: சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன்.  மதுரைக்கு வந்தஆழிப்பேரலை(“சுனாமி”)யை வேல் எறிந்து தடுத்து நிறுத்திய மன்னன்.  காந்திமதி:உக்கிர குமாரன் என்ற சுந்தர பாண்டியனின் மனைவி
(படலம் 17)
வீரபாண்டியன்:  உக்கிர பாண்டியனின் மகன்
அபிடேக பாண்டியன்: வீரபாண்டியனின் மகன் –பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை அழிக்க வந்ததது. அதனை வற்றச் செய்த மன்னன்.
விக்கிரம பாண்டியன்: அபிடேக பாண்டியனின் மகன்
(படலம் 24)
இராச சேகரன்:  விக்கிரம பாண்டியனின் மகன்
(படலம் 25) 
குலோத்துங்கன்:  இராசசேகர பாண்டியனின் மகன்
(படலம் 28)
அனந்தகுணன்:  குலோத்துங்கனின் மகன் –பசுமலை, இடபமலைகள் இவன் காலத்தில் உண்டாகின. இராமபிரான் இம்மலைகளில் தங்கி அகத்தியரிடம் உபதேசம் பெற்றார்.
(படலம் 30) 
குலபூடணன்:  அனந்தகுணனின் மகன்
(படலம் 34)
இராசேந்திரன்:  குலபூடணனின் மகன்
(படலம் 37) 
இராசேசன்:இராசேந்திரனின் மகன்
இராசகம்பீரன்:  இராசேசனின் மகன்
பாண்டி வமிச தீபன்:  இராசகம்பீரனின் மகன்
புரந்தரசித்து:   பாண்டி வமிச தீபனின் மகன்
பாண்டிவமிச பதாகன்:  புரந்தரசித்துவின் மகன்
சுந்தரேசபாத சேகரன்:   பாண்டி வமிச பாதகனின் மகன்
படலம் 40) 
வரகுணன்: சுந்தரேசபாத சேகரனின் மகன்
(படலம் 44) 
இராசராச பாண்டியன்:  வரகுணனின் மகன் — பன்றிமலை இனது ஆட்சிக்காலத்தில் உருவானது
(படலம் 49) 
சுகுணன்:  இராச இராச பாண்டியனின் மகன்.  சுகுணனுக்குப் பிறகு சித்திரரதன் முதல் அதுலகீர்த்திவரை 22 பாண்டிய மன்னர்கள் வழி வழி வந்து ஆட்சி செய்தனர்.
1) சித்திரரதன்
2) சித்திரபூடணன்
3) சித்திரத்துவசன்
4) சித்திரவருமன்
5) சித்திரசேனன்
6) சித்திரவிக்கிரமன்
7) இராசமார்த்தாண்டன்
8) இராச சூடாமணி
9) இராச சார்த்தூலன்
10) துவிசராச குலோத்தமன்
11) ஆயோதனப் பிரவீணன்
12) இராச குஞ்சரன்
13) பரவிராச பயங்கரன்
14) உக்கிரசேனன்
15) சத்ருஞ்சயன் வீமரதன்
16) வீம பராக்கிரமன்
17) பிரதாப மார்த்தாண்டன்
18) விக்கிரம கஞ்சனன்
19) சமர கோலாகலன்
(20, 21…..??)
22) அதுல கீர்த்தி
கீர்த்திவீடணன்:  அதுல கீர்த்தியின் மகன்/இவனது ஆட்சிக் காலத்தில் பிரளயம்  ஏற்பட்டு ஏழுகடல்களும் பொங்கி எழுந்து (ஆழிப்பேரலை,“சுனாமி”) உலகை அழித்தன.  பிரளயத்திற்கு (ஆழிப்பேரலை,,“சுனாமி“)க்குப் பின்னர்.  சந்திர குலத்தில் பாண்டியர் தோன்றினர்.  சூரியன் மற்றம் அக்னி குலத்தில் மற்ற இரு தமிழ் மன்னர் (சோழ சேரர்) தோன்றினர்.
வங்கியசேகர பாண்டியன்: சந்திரகுலத்தில் தோன்றி பாண்டிய மன்னன்/இன்றைய மதுரை நகரை பண்டைப் பெருமை விளங்கம் வகையில் உருவாக்கியவன்
(படலம் 51) 
வங்கிய சூடாமணி (சண்பக பாண்டியன்):  வங்கிய சேகரனின் மகன்.
(படலம் 58) 
சண்பக பாண்டியனுக்குப் பின் குலேச பாண்டியன் வரை  15 பாண்டிய மன்னர்கள் வழி வழி வந்து ஆட்சி செய்தனர்.
1) பிரதாப சூரியன்
2) வங்கிசத் துவசன்
3) இரிபுமருத்தனன்
4) சேரவங்கி சாந்தகன்
5) பாண்டி வங்கி சேசன்
6) வங்கிச்சிரோன்மணி
7) பாண்டீச்சுரன்
8) குலத்துவசன்
9) வங்கிச வீபூடணன்
10)சோம சூடாமணி
11) குல சூடாமணி
12) இராச சூடாமணி
13) பூப சூடாமணி
14)….?
15) குலேசன்
(படலம் 58) 
அரிமர்த்தன பாண்டியன் / மாணிக்கவாசகரை அமைச்சராகக் கொண்ட மன்னன்
(படலம் 62) 
அரிமர்த்தன பாண்டியனுக்குப் பின் பல மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆண்டனர்.
கூன்பாண்டியன்  (சுந்தர பாண்டியன்) /சோழன் மகள் மங்கையர்க்கரசியாரை மணந்தவன்/திருஞானசம்பந்தரால் சைவத்திற்குத் திரும்பியவர்.

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கம் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஒங்கி
புல்குக உலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க

திருச்சிற்றம்பலம்

Advertisements

One thought on “மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் — திருவிளையாடல் புராணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s